எழுத்துரு அளவு Larger Font Smaller Fontபுதுடில்லி ஏப். 18-  நாடாளுமன்றத்தில் அதிகார பூர்வ மொழிகள் பற்றி பரிந்துரைகள் அளிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தியை பிரபலப்படுத்த 117 பரிந்துரைகளைக் கொடுத்துள்ளது. அதில் சிலவற்றை நிராகரித்த குடியரசுத் தலைவர், ஒரு சில பரிந்துரைகளுக்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள் இந்தியில்தான் பேசவேண் டுமாம்.

குடியரசு தலைவர்
ஒப்புதல் அளித்த பரிந்துரைகள்


இந்தி தெரிந்த அமைச்சர்கள் நாடாளு மன்றத்தில் இனி இந்தியில்தான் உரையாற்ற வேண்டும். குடியரசுத்தலைவரும் இந்தியில் தான் உரையாற்ற வேண்டும்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான டிக்கெட்டுகளில் இந்தி பயன்படுத்தப்பட வேண்டும்.

ஏர் இந்தியா விமானங்களின் பயணிகள் படிக்க இந்தி புத்தகங்கள், நாளிதழ்கள் வைக் கப்பட வேண்டும்.

குடியரசுத்தலைவர்
நிராகரித்த பரிந்துரைகள்


மத்திய அரசு பணியிடங்களில் அமர்த்தப் படுபவர்களுக்கு குறைந்தப்பட்ச இந்தி மொழி அறிவு இருக்க வேண்டும் என்ற பரிந்துரை நிராகரிப்பு.

பொதுத்துறை நிறுவனங்கள் தகவல் பரி மாற்றங்களை இந்தியில்தான் செய்ய வேண்டும் என்ற பரிந்துரை நிராகரிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ மற்றும் கேந்திரா பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை மாநில அரசுகளின் ஒப்புதல் இருந்தால் செயல்படுத்தலாம் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

தற்போது குடியரசுத்தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் நிறைவடைகிறது. நாடாளுமன்றத்தில் இந்தியில் பேச வேண்டும் என்ற  உத்தரவால், அடுத்த குடியரசுத்தலைவர் இந்தியில் மட்டுமே உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner