எழுத்துரு அளவு Larger Font Smaller Font


அத்வானி - உமாபாரதி - முரளிமனோகர் ஜோஷிமீது மீண்டும் விசாரணை!உச்சநீதிமன்றம் தீர்ப்பு


புதுடில்லி ஏப். 19 பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் விடுவிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில், 16- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி, டிசம்பர் 6, 1992- ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மதக் கலவரங்களும் நடந்தன. தொடர்ந்து, பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 21 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் ரேபரேலி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை உறுதி செய்த நிலையில், விடு விப்பை எதிர்த்து சிபிஅய் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு களைக் கைவிடுவதை எதிர்த்து, சிபிஅய் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று (19.4.2017) வழங்கியுள்ளது. அதன்படி, அத்வானி,முரளிமனோகர்ஜோஷிஆகியோர் மீதானகுற்றச்சாட்டைமீண்டும்விசாரிக்கஉத்தர விட்டுள்ளது. கல்யாண் சிங் விடுவிக்கப்பட்டுள் ளார்.

25 ஆண்டுகளாக நடந்துவரும் இந்த வழக்கில், கால வரையறையுடன் கூடிய விசாரணையை இன்னும் இரண்டு ஆண்டு காலங்களில் முடிக்க வேண்டுமென நீதிபதிகள் பி.சி.கோஷ் மற்றும் நாரிமன் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய பா.ஜ.க. மூத்த தலைவர்கள் உள்பட 21 பேரில், தற்போது 18 பேர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போதைய ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங் மீதான வழக்கு கைவிடப்பட்டது. மேலும், மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே மற்றும் விஎச்பி தலைவர் ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் ஆகிய இருவரும் காலமானதால், அவர்கள் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner