எழுத்துரு அளவு Larger Font Smaller Font

** விஜய் மல்லையா நேற்று (18.4.2017) லண்டனில் கைதாகி பிணையில் விடுதலை.

** கருப்புப் பணம் குறித்து இதுவரை நிதியமைச்சகத்திற்கு 38 ஆயிரம் மின்னஞ்சல்கள் சென்றுள்ளன.

** காசநோயை ஒழிக்க ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மாத்திரைகள் வழங்க அரசு திட்டம்.

** அரசு கேபிள் டிவி. நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடைத்துள்ளது.

** முழுநேர ஆளுநரை நியமிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

** பெங்களூரு மாண்டியா, தும்கூரு உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

** ரூ.2 ஆயிரத்திற்கும் குறைவான மதிப்பில் வழங்கப்படும் காசோலைக்கு ரூ.100 கட்டணத்தை எஸ்.பி.அய். கார்டு நிறுவனம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது.

** ரூ.1,388 கோடி கடன் பாக்கிக்காக தமிழகம், கருநாடகம், தெலங்கானா மாநிலங்களுக்கு வழங்கும் மின்சாரத்தை நிறுத்த என்.டி.பி.சி. நிறுவனம் முடிவு செய்துள்ளது.

** சாலை மறியலில் ஈடுபட்டதாக நடப்பாண்டில் 1,834 வழக்குகள் பதிவு.

** பயிர் கருகிய வேதனையில் ஆரணி அருகே விவசாயி உயிரிழப்பு - உயிரிழப்பு எண்ணிக்கை 300 அய் தொட்டுள்ளது.

** எடையளவு, பொட்டலப் பொருள்கள் தொடர்பான குறைபாடுகளைக் களைந்திட புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner