எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எச்சில் இலை?

எச்சில் இலைபற்றிப் பேசி இருக்கிறார் மத்திய இணை யமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன்.

‘இரட்டை இலையை மீட்கவே இரு அணிகளும் இணைவதாகக் கருதுகிறீர்களா?’ என்று செய்தியாளர் கேட்டதற்கு,

‘‘அவர்கள் இரட்டை இலை எடுத்தாலும், எச்சில் இலை எடுத்தாலும் அதுபற்றிக் கவலையில்லை’’ என்று கூறியவர், சபரிமலையில் பக்தர்கள் அன்னதானம் நடத்திய பின், கன்னி அய்யப்பப் பக்தர்கள் எச்சில் இலையை எடுக்கச் செய்வர்.

அதைத்தான் எச்சில் இலை என்று சொன்னேன் என்றும் சொல்லியுள்ளார்.

அது சரி, சபரிமலையில் கன்னி அய்யப்பப் பக்தர்கள் எடுக்கும் எச்சில் இலையைப் பெருமையாக சொல்லுகிறாரா - இழிவாக சொல்லுகிறாரா? ஏனெனில், பொன்னார் பயபக்தி மிக்கவராயிற்றே!

ப.சிதம்பரம் கருத்து

2016-2017 ஆம் நிதியாண்டில், ரயில்வே துறையின் செயல்பாடுகள் மிக மோசமான நிலையில் உள்ளன. ஒரு ரூபாய் வரவு என்றால், 94.9 பைசா செலவு என்ற பரிதாப நிலை! ரயில்வே துறையைத் தூக்கி நிறுத்த எவ்வித முயற்சியையும் பி.ஜே.பி. அரசு எடுக்கவில்லை என்று மேனாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சுழல் விளக்கு

மத்திய அரசின் அறி வுறுத்தலை அடுத்து தனது காரிலுள்ள சுழல் விளக்கை அகற்றியுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தி யாளர்களிடம் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner