எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* கேளம்பாக்கம் அடுத்த படூரில் மதுக்கடைகளை மூடக்கோரி ஏழு வயது சிறுவன் சாலையில் தனியாக அமர்ந்து போராட்டம்.

* அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் தினகரன், தான் அக்கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்டதாக அறிவித்துள்ளார்.

* தென்னையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் நீரா பானத்திற்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

* துணை மின் நிலையங்களில் இரவு ஒரு மணிவரை உதவி மின் பொறியாளர்கள் பணியாற்றவேண்டும் - தமிழக அரசு உத்தரவு.

* கேபிள் டி.வி. சந்தா செலுத்த கைப்பேசியில் புதிய செயலியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

* புளியந்தோப்பு துணை ஆணையர் ஜி.ராமர், தமிழக முதல்வரின் பாதுகாப்பு அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

* வாக்களிப்பு உறுதிச் சீட்டு இயந்திரம் வாங்க ரூ.3174 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

* மாநில அரசு நிறுவனங்கள் வெளிநாட்டில் நேரடியாகக் கடன் வாங்க மத்திய அரசு இசைவு.

* 2ஜி வழக்கில் இறுதி வாதம் முடிந்தது.

* பள்ளிக் கல்வித் துறைக்குத் தனி இணைய தளம் அமைக்க மத்திய அரசு உத்தரவு.

* தஞ்சை பெரிய கோவிலில் நேற்று தீ விபத்து.

* தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஆறு லட்சம் சேமிப்புக் கணக்குகள் அஞ்சலகங்களில் தொடக்கம்.

* அடுத்த மாதம் மூன்று செயற்கைக்கோள்களை ஏவ இஸ்ரோ திட்டம்.

* செல்லாத நோட்டு அறிவிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை அளவிடுவதற்கு இன்னும் சில மாதங்களாகும் - மத்திய அரசின் தலைமைப்  பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தகவல்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner