எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, ஏப்.21 உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக சார்பில் சாமியார் ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ள நிலையில், இந்துத்துவா திணிப்பு செயல்பாடுகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.

மாநில முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆக்ரா விமான நிலையத்துக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பெயர் சூட்டுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கோரக்பூர் விமானப்படையின் விமான நிலையத்துக்கு நாத் மொனாஸ்டிக் இயக்கத்தின் நிறுவனர் மகாயோகி கோரக்நாத் பெயரை சூட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை மாநில மின்துறை அமைச்சர் சிறீகாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

நாத் துறவிகளுக்கான மய்யத்தை வழிநடத்திவருபவரும், கோரக் நாத் மடத்தின் தலைமை சாமியாருமாகிய (மடாதிபதி) ஆதித்யநாத் தற்போது உத்தரப்பிரதேச மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

விக்லங் கல்யாண் விபாக் (மாற்றுத்திறனாளி நலத்துறை) இனிமேல் திவ்யங் ஜன் ஷாசக்திகரன் விபாக் (மாற்றுத்திறனாளி நலத்துறை என்று பெயர் மாற்றம் செய்து அழைக்கப்படும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோரக்பூர் நாடாளுமுன்றத்தின் உறுப்பினராக அய்ந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்ட சாமியார்  ஆதித்யநாத் உத்தரப் பிரதேச முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை மூடுவது, பெண்களை தொல்லைபடுத்தும் Ôகாதலுக்கு எதிரான குழுவினர்Õமீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு, அரசுத் துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள் பான், பான் மசாலா ஆகியவற்றை உட்கொள்வதை அலுவலகங்களுக்குள்  தடைசெய்வது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner