எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஏப்.24 மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க நெடுஞ்சாலைகளை, ஊரக மற் றும் நகர சாலைகளாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது.

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட உச்சநீதிமன்றம்உத்தரவிட்ட தையடுத்து, தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இந்த மாதம் மூடப்பட்டது. இத னால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சிகளுக்கு உட்பட்டசாலைகளாகமாற் றும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறப்பதற்காக சாலைகளின் பெயர்கள் மாற் றப்படுவதாக புகாரில் திமுக குறிப்பிட்டுள்ளது.

திமுகதொடர்ந்தமனுவை, நாளை அவசர வழக்காக விசா ரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner