எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அங்க தேசத்து அரசன் ரோமபாதன் என்பவன்; அவன் ஆண்ட தேசம், இப்பொழுது தமிழ்நாட்டில் நிலவுவதுபோல மழை பொய்த்த வறட்சி நாடாகப் பல்லிளித்துக் கிடந்தது.

ரிஷ்ய சிருங்கர் என்ற முனி வர்  ஒருவர் - புராணத்தில் சொல்லப்படுவதுண்டு. பிள்ளை இல்லாத தசரதனுக்கு அப்பேறு கிடைக்க புத்திர காமேஷ்டியாகம் நடத்திய மாமுனிவர்களுள் இந்தப் பேர் வழியும் ஒருவராம்.

இந்த மாமுனியை நாட் டுக்கு அழைத்து வந்தால் அந்தத் தவ முனியின் பாதம், நம் நாட்டு மண்ணில் பதிந்தால் மாமழை பொழியும் என்றனர் அரசனின் மந்திராதிபதிகள்.

அவ்வாறே ரிஷ்ய சிருங் கருக்கு அழைப்புச் சென்றது. மெத்த மரியாதையோடு அழைத்து வரப்பட்டான்! என்ன ஆச்சரியம்! மாமுனி வந்ததும் மழை பொழிந்தது அசாதாரணம்!

சரி, நடப்பு உலகிற்கு வருவோம். இந்த மாமுனி பிரதிஷ்டை செய்த கோவில் ஒன்று உள்ளது. எங்கே இன்றைய திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அந்தக் கோவில் உள்ளதாம். திருவூர் என்று புராண காலத்தில் பெயராம். இப்பொழுது திருகூர் என்று மருவி  வழங்கப்படுகிறது.

இந்தக்கோவிலைரிஷ்ய சிருங்கர் பிரதிஷ்டை செய்த

தால் ரிஷ்ய சிருங்கேஸ்வரி என்று இந்தக் கோவிலுக்குப் பெயராக அமைந்துவிட்டதாம். (கோவில்களும், கடவுள்களும் எப்படி ஏற்பட்டன என்பதைத் தெரிந்துகொள்க!’)

மழை வேண்டி இந்தக் கோவிலில் பூஜைகள் செய் தால் மழை கொட்டோ கொட் டென்று கொட்டுமாம்.

இவ்வளவு எளிதான வழி இருக்கும்பொழுதுநமது மாநில அரசாக இருக்கட்டும் அல்லது நமது மக்களாகத்தான் ஆகட்டும் எதற்காக மத்திய அரசிடமும்,கருநாடக அரசிடமும், நீதிமன்றங்களிடமும் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கவேண்டும்?

எதற்காகஅய்யாக் கண்ணுகள் டில்லிவரை சென்று, சாலை ஓரத்தில் சத்தியாக்கிரகம் செய்யவேண்டும். பழனியாண்டவன்போல கோவணாண்டியாக காட்சியளிக்கவேண்டும்.

பக்தர்கள் கொஞ்சம் முயற்சி செய்யக்கூடாதா? வெகுதூரத்தில் இல்லையே, நமது திருவள்ளூர் பக்கத்தில்தானே ரிஷ்ய சிருங்கேஸ்வரர் இருக்கிறார்.

அட, நீங்க ஒண்ணு அந்த ஊரிலேயே மழையைக் காணோம் - குடிதண்ணீருக்கே குட்டிக்காரணம் அடிக்கிறார்கள் என்கிறீர்களா?

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner