எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாணவர், சிறுவரிடையே கொலை செய்வதற்கு ஆர்.எஸ்.எஸ்.  பயிற்சி அளிக்கிறது

கேரள முதல்வர் குற்றச்சாற்று

திருவனந்தபுரம், ஏப்.27 கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் மாணவர் மற்றும் சிறுவரிடையே உடற் பயிற்சி என்கிற பெயரால் எப்படி கொலை செய்வது என்கிற பயிற்சியை அளித்து வருகிறது என்றும், ஆர்.எஸ்.எஸ். பயிற்சிகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கானநட வடிக்கையை அரசு எடுக் கும் என்றும்  கேரள முதல் வர் பினராய் விஜயன் குறிப் பிட்டுள்ளார்.

கேரள சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, கேரள முதல்வர் பினராய் விஜயன் பதில் அளித்துப்பேசும்போது, “மாணவர்கள், குழந்தைகளுக் கும் கூட கொலை செய்வது எப்படி என்கிற பயிற்சியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அளித்து வருகிறது. உடற் பயிற்சி என்கிற பெயரால் ஆர்.எஸ்.எஸ்-.அளித்துவரும் பயிற்சிகளை தடுத்துநிறுத்த அரசு தேவையான நடவடிக் கையை எடுக்கும்’’ என்று குறிப்பிட்டார்.

காந்தி கொலை பின்ன ணியில் ஆர்.எஸ்.எஸ்.

காந்தியின் படுகொலையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்-. உள்ளது என்று சட்டமன்றத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் குறிப்பிட்டார்.

ஆர்.எஸ்.எஸ்-. காந்தியைக் கொன்றது என்று குறிப்பிட்ட கேரள முதல்வர் பினராய் விஜயன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று 48 மணி நேர கெடுவை பாஜகவிதித் துள்ளது. மன்னிப்பு கேட்க வில்லைஎன்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner