எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திராவிடர் இயக்கத்தின் முக்கிய நிறுவனர்களில் ஒருவரான சர்.பிட்டி தியாகராயரின் பிறந்த நாள் இன்று!

இன்று ஏழை, எளிய இளம்பிள்ளைகள் ஏராளம் சத்துணவு சாப்பிட்டு படிப்பைத் தொடர்கின்றனர் என்றால், அதற்கு முன்னோடியாகத் திட்டம் வகுத்துச் செயல்படுத்திய தீரர் தியாகராயர் - சென்னை மேயராக இருந்தபோது கார்ப்பரேசன் பள்ளிகளில் பகல் உணவுத் திட்டத்தினை செயல்படுத்தினார்.

இந்தியாவிலேயே அவர்தான் முதன்முதலாக பள்ளிகளில் உணவு போட்டு படிக்க வைத்த பெருமைக்குரியவர் ஆவார்!

தன்னைத் தேடி வந்த ‘பிரதமர்’ பதவியை, (முதலமைச்சர் என்பது அப்படித்தான் அன்று அழைக்கப்பட்டது - றிக்ஷீமீனீவீமீக்ஷீ). ஏற்க மறுத்து, அந்த இடத்தில் கடலூர் சுப்பராயலு ரெட்டியாரை அமர வைத்த லட்சிய வீரர்; பதவி சுகம் நாடா படிப்பினையானவர்!

மிக நீண்ட காலமாக பார்ப்பனரல்லாத திராவிட மக்கள் அனுபவிக்கும் படிப்புரிமை, பணி உரிமைகளுக்கு முக்கிய காரணகர்த்தா நம் தியாகராயப் பெருமான்!

நம் தியாகராயருடன் டாக்டர் டாக்டர் சி.நேடசனாரும், டாக்டர் டி.எம்.நாயரும் மட்டுமே  ‘நீதிக்கட்சி’ என்று அழைக்கப்பட்ட திராவிடர் இயக்கம் தோன்றிடக் காரணமானவர்கள் அல்ல; பனகல் அரசரும், சர்.ஏ.டி.பன்னீர்செல்வமும் அப்பாதையைச் செப்பனிட்ட பெருமைக்குரிய தலைவர்கள்.

காங்கிரசிலிருந்தாலும், சமூகநீதிக் கொடித் தலைதாழாமல் பறப்பதற்கு முழுக் காரணம் தந்தை பெரியார் என்ற பிறவிப் போர் வீரரின் இடையறா மக்களின் எழுச்சிப் போராட்டங்கள்தான்!

தியாகராய வள்ளல் நினைவைப் போற்றுவோம்!

 

கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்.

சென்னை 
27.4.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner