எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.28- தனியார் தொலைக் காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அய்யாக்கண்ணு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என தமிழக அரசு கூறியதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

விவசாயிகளின் தற்கொலையை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். விவசாயி களின் கடனை தள்ளுபடி செய்தால் மட்டுமே தற்கொலையை தடுக்க முடியும் என்றும் அய்யாக்கண்ணு கூறினார்.

வங்கி அதிகாரிகள் கடன் பெற்ற விவசாயிகளின் மனைவி மக்களை தரக்குறைவாக பேசுவது மற்றும் வீடு, நிலங்களை விற்று கடனை அடைக்குமாறு கூறுவதாலேயே விவசாயிகள் மனமுடைந்து தற் கொலை செய்து கொள்வதாகவும் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

வங்கி அதிகாரிகள் விவசாயி களை மிரட்டுவதை அரசு கண்டிக்க வேண்டும் என்றும் அய்யக்கண்ணு வலியுறுத்தினார். தமிழக அரசு விவசாயிகளை வஞ்சிக்கும் நோக் கத்துடன் செயல்படுவதாகவும் அய் யாக்கண்ணு கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner