எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி,ஏப்.28ஒடிசா மாநில கடற்கரையிலுள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து அக்னி-3 ஏவுகணை நேற்று வெற்றிகரமாக ஏவி பரி சோதித்துப் பார்க்கப்பட்டது.

இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) நேற்று வெளியிட்ட அறிக்கையில்,

“அப்துல்கலாம்தீவிலுள்ள ஒருங்கிணைந்த சோதனை மய் யத்தின் 4-ஆவது ஏவுதளத்தில் இருந்து அக்னி-3 ஏவுகணை காலை9.12மணிக்குஏவப் பட்டது.டிஆர்டிஓ உதவியு டன்ராணுவத்தின்ஏவுகணை பிரிவைச் சேர்ந்த போர்ப்படையி னர் நடத்திய இந்த சோதனை, குறிப்பிட்ட இலக்கை தாக்கி வெற்றி பெற்றது” என கூறப் பட்டுள்ளது.

அக்னி -3 ஏவுகணை, 1.5 டன் எடை கொண்ட அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று 3,000 கி.மீ. தொலைவுக்கும் அப்பால் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டது. இரண்டு நிலைகளைக் கொண்ட இந்த ஏவுகணை, 17 மீட்டர் நீளமும், 2 மீட்டர் விட்டமும், 2,200 கிலோ எடையும் கொண் டது. இந்த ஏவுகணை கடந்த 2011ஆ-ம் ஆண்டு ஜூன் மாதம் ராணுவத்தில் சேர்க்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner