எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை,  ஏப். 29 உச்சநீதிமன் றத்தில் அ.தி.மு.க. அரசு  தாக் கல் செய்துள்ள  பிர மாணப்பத்திரத்தை      எதிர்த்து விவசாயிகளை   திரட்டி தலைமைச் செயல கத்தின் முன்  போராட்டம்  நடத்தப்  போவதாக தென் னிந்திய  நதிகள்  இணைப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு எச்சரிக்கை  விடுத் துள்ளார்.

இது குறித்து தென் னிந்திய நதிகள் இணைப்பு சங்க  ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு நேற்று (28.4.2017) செய்தியா ளர்களிடம்  கூறியதாவது:- இன்றைக்கு உச்சநீதிமன் றத்திலே தமிழக அரசு தவறான ஒரு அறிக்கையை தாக்கல் செய்கிறது. உச்சநீதிமன்றத்தை  ஏமாற்றப் பார்க்கிறது. தமிழக  விவசாயிகள் வறட்சியால் தற்கொலை செய்ய வில்லை. தமிழகத்தில் விவசாயிகள் வயது முதிர்ந்தும் குடும்ப   பிரச்சினைகள் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று தவறான தகவல்களை தாக்கல்  செய்கிறது.

20- --க்கும் மேற்பட்ட எப்.அய்.ஆர். இருக்கிறது. வறட்சியால் எனது வயலில் பயிர் சாகுபடி செய்ய முடியவில்லை. 140 ஆண்டுகளுக்கு  மேலாக ஓடிய  காவேரி வறண்டுபோய் 29 லட்சம் ஏக்கர் சாகுபடி  செய்த  காவிரி இப்போது ஒரே ஒரு ஏக்கர் கூட காவிரி தண்ணீரால் சாகுபடி செய்ய முடியவில்லை.

அதேபோல இன்றைக்கு தவறான தகவல்களை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியிருப்பதைக்  கண்டித்து நாங்கள் தலைமைச் செயலகத்தின் முன்   விவசாயி சங்கம் சார்பில் போராடுவோம் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner