எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.30  உயர் மருத்துவக் கல்வியில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு அளிக்கப் பட்டுவந்த இடஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்படுத்தி உத்தரவு பிறப்பித்துள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனை களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு உயர் மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் மீது தீர்ப்பு கூறிய நீதிபதி புஷ்பா சத்தியநாரா யணா 50 சதவீத இடஒதுக்கீட்டை 30 சத வீதமாக குறைக்க உத்தரவிட்டார். மேலும் நீட் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

50 சதவீத இடஒதுக்கீடு கோரி அரசு மருத்துவர்கள் ரத்தம் சிந்தி போராட்டம்

மருத்துவப் பட்டமேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மருத்துவர்கள் 11-ஆவது நாளாக நேற்றும் (29.4.2017) பேராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் கண்களைக்கட்டிப் போராட் டம், பட்டினிப் போராட்டம், தூங்குதல், தெருக்கூத்து, ரத்தம் சிந்துதல் போன்ற போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவமனைகளில் பணியாற் றும் மருத்துவர்கள் மருத்துவ பட்ட மேற் படிப்பில் சேருவதற்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை பெற அவசரச் சட்டம் இயற்ற வேண்டும். இடஒதுக்கீடு தொடர்ந்து கிடைக்க சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், மருத்துப் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 11-ஆவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தின் சார்பில் சென்னை ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் முற்று கைப் போராட்டம் நடந்தது. இதில் மருத் துவர்கள், மருத்துவ மாணவர்கள் சுமார் 100 பேர் பங்கேற்றனர். அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு பட்டமேற்படிப்பு மருத்து வர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை மருத் துவக் கல்லூரி (எம்எம்சி) வளாகத்தில் நேற்று 3-ஆவது நாளாக நேற்று தொடர் பட்டினிப் போராட்டம் நடந்தது.

சென்னை மருத்துவக் கல்லூரி மாண வர்கள் அமைப்பினர் கல்லூரி வளாகத்தில் தூங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலையில் எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கோரிக்கையை விளக்கி தெருக்கூத்து நடத்தினர். தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் ‘உதிரம் உதிர்த்து உரிமை மீட்பு’ என்ற போராட்டத்தை நடத்தினர். அப்போது 400-க்கும் மேற்பட்ட மருத்து வர்கள் குண்டூசியால் கை விரலில் குத்தி ஒரு சொட்டு ரத்தத்தை பேனரில் இருந்த கேள்விக்குறியில் வைத்தனர்.

உயர் மருத்துவப்படிப்பில் இதுவரை இருந்து வந்துள்ள50 விழுக்காடு இட ஒதுக்கீடுதொடரவேண்டும் என்பதை வலி யுறுத்தி மருத்துவர்கள், பயிற்சி மருத்து வர்கள், மருத்துவ மாணவர்கள் ஒன்றி ணைந்து பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச் சியாகப் போராடி வருகின்றனர்.

இது தொடர்பாக மருத்துவர் சங்க தலைவர் செந்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- உயர்நீதிமன்ற உத்தரவின் காரணமாக கிராம பகுதிகளில் உள்ள மருத் துவமனைகளில் பணிபுரியும் மருத்து வர்கள் உயர் படிப்புக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இளம் மருத்து வர்கள் பெரும்பாலும் கிராம பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே பணியாற்றி வருகிறார்கள். மலைப்பகுதி மற்றும் நகரங்களை விட்டு வெகுதூரத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அவர் கள் பணியாற்றுகிறார்கள். அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் மருத்துவர் களுக்கு உயர் படிப்பில் வழங்கப்பட்ட 50 சதவீத இடஒதுக்கீடு குறைக்கப்பட் டுள்ளதுடன், நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றும் கூறப் பட்டுள்ளது.

கிராம பகுதிகளில் பணிபுரியும் மருத்து வர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு பயிற்சி நிலையங்களுக்கு சென்று கல்வி கற்கும் வாய்ப்பு இல்லை. இதனால் அவர்களுக்கு உயர் படிப்புக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

தொடர்ந்து நாங்கள் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற் றினால் உயர் படிப்புக்கு செல்லக்கூடிய வாய்ப்பு இல்லாமல் போய் விடும்.

இடஒதுக்கீடு தொடரவேண்டும்

எனவே, புதிய கலந்தாய்வு முறையைக் கொண்டு வந்து 50 சதவீத இடஒதுக்கீடு நீடிக்க வேண்டும் என்று போராடி வருகி றோம். இந்த கோரிக்கை நிறைவேற்றப் படவில்லை என்றால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஏழாயிரம் மருத்துவர்கள் பணியிலிருந்து வில குவது என்று முடிவு செய்துள்ளோம்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு மருத்துவர்கள் அமைப்புகளும் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எங்கள் போராட் டம் மேலும் தீவிரம் அடையும்.

இவ்வாறு மருத்துவர் செந்தில் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner