எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மூடநம்பிக்கைகள், நாளும் - புதுப்புது வியாதிகள் - பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், டெங்குக் காய்ச்சல், 'சார்ஸ்' காய்ச்சல் நோய் போல, வைதிகபுரியினரும், வியாபாரிகளும், ஊடக வியாபாரிகளுக்கு விளம்பர வருவாயை எண்ணியே அவர்களும், அவ்வப்போது எதையாவது புதிது புதிதாய் பரப்பி, புதிய 'வியாபார டெக்னிக்குகளை' வளர்த்து வருகிறார்கள் கொழுத்தும் திகழுகிறார்கள்!

'அட்சய திருதியை' என்ற சொல்லே அது தமிழனுக்குச் சற்றும் உரிமை உடையதல்ல; வட மொழி, வடக்கேயிருந்து ஆரியர்களால் இறக்குமதி செய்யப்பட்ட மூடநம்பிக்கை என்பது எடுத்த எடுப்பிலேயே புரிய வேண்டும்! மண்டூகங்களுக்குப் புரிவதில்லை.

ஆசை வெட்க மறியாதது மட்டுமல்ல அறிவையும் புறந் தள்ளுவதாகுமே!

தங்கம் அன்றைக்கு வாங்கினால் தங்கம் ஏராளம் பெருகும் என்று ஒரு 'புருடா'வைப் பரப்பியுள்ளர்கள்!

நகைக் கடைகளில் அமோக வியாபாரம்  ஆயிரம் (1000)  கோடி ரூபாய்களுக்கு தங்க விற்பனை - க்யூ வரிசையில்!

இந்த நகைகளை திருடன் திருடாமல் இருப்பானா? அட்சய திருதியையில் வாங்கிய பவுன் செயின் அறுபடாமல் காப்பாற்றிட உத்தரவாதம் உண்டா? அடகு போகாமல் இருக்குமா?

கோயில் திருப்பணி செய்தால் கோடி நன்மை; ஆயுள் வளரும்; சகல போக போக்கியங்களும் கிடைக்கும் என்று கருதி குட்டிச் சுவர்களுக்கெல்லாம் சாயம் அடித்து, வர்ணமடித்து கும்பாபிஷேகம், குடமுழுக்கு என்பதை செய்து கருப்புப் பணத்தின் வீச்சை காட்டியவர்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தனர்?

அவர்கள் ஆயுள் நீளவில்லையே! கடவுள் இல்லை என்ற தந்தை பெரியார் 95 ஆண்டுகள் வாழ்ந்தார்; அவரது 95 ஆண்டுகளை மூன்றாகப் பெருக்க வேண்டும்! காரணம் அவ்வளவு கடினமாக உழைத்தார்!

2500 ஆண்டுகளுக்கு முன்பே கடவுள் இல்லை என்ற புத்தர் தனது 80ஆவது வயதில்தான் இறந்தார்!

பகுத்தறிவாளர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் கூட்டங்களில் இந்த வயதுப் பட்டியலை  சிறு வயதில் இறந்த சங்கராச்சாரியார்கள் முதல் அவதாரம், மதவாதிகள் அத்துணைப் பேர்களின் பட்டியலை கூட்ட மேடைகளில் தனது நகைச்சுவை கலந்த பேச்சில் புட்டுப் புட்டு வைத்தாரே!

திருவண்ணாமலை அருகே 7 ஏக்கராவில் கோயில் கட்டியவர் கைது ஆனார்,  தேர்தல் சின்ன வழக்கில் மல்லி கார்ஜுனன் என்பவர்!

தனக்குப் போட்டியா என்று அரோகரா அண்ணாமலையாருக்குக் கோபமா?

அதனால்தான் தண்டித்து ஜெயிலுக்கு அனுப்பினாரா?

முன்பே இதே மாதிரி  7 ஏக்கரா பூமியில் அங்கே கோயில் கட்டிய நித்தியானந்தாவும் ஜெயிலுக்குப் போனாராம்!

அதுவும் அண்ணாமலையாரின் கோபம் தானாம்! தனக்குப் போட்டிக் கடை வைக்க (இவன்கள்) ஏற்பாடு செய்வதா என்று கோபம்.

- இப்படி 'இனமலர்' இன்றைய இதழில் (30.4.2017) எழுதியுள்ளது.

சபாஷ்! பலே பலே, மனிதர்களின் பொறாமை, போட்டி பொச்சரிப்பு கடவுள்களையும் விடாது போலும்!

என்னே மூடநம்பிக்கை வியாதி!

- ஊசி மிளகாய்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner