எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மோடியின் நிழலான ‘துக்ளக்‘ இப்படியொரு கார்ட்டூனைப் போட்டுள்ளது. மூட்டைப் பூச்சிக்கும், கொசுவுக்கும் கூடப் பயப்படத்தான் வேண்டியுள்ளது. அதனால் மூட்டைப் பூச்சிக்கே  பயப்படுகிறீர்களே என்று கேட்பார்களா?

கொசு சிறியதாக இருந்தாலும், அதனால் பரவும் நோய்கள் கொடுமையானது.

மோடி என்ற மனிதன் - அவர் சுமந்து திரியும் மதவெறி மனித சமூகத்தின் ஒற்றுமைக்கும், சகோதரத்துவத்திற்கும் உலை வைக்கக் கூடியது. அந்த வகையில், அஞ்சுவது அறிவுடைமை - அஞ்சுவது அஞ்சாதது பேதமையே!

காகிதத்தில்கூட நஞ்சைத் தடவி கொலை செய்யும் கும்பல் நாட்டில் இருக்கவில்லையா?

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி - தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், தமிழகக் காங்கிரசு கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் ஆகியோர் மதவெறிக் கூட்டத்தை - அந்த நச்சுக் கிருமிகளை அடையாளம் காட்டுகின்றனர் என்று ‘துக்ளக்‘ கார்ட்டூன் போடுவது -ஒருவகையில் பெருமைப்படுத்தக்கூடிய சமாச்சாரம்தானே!

இன்னொரு வகையில் சொல்லவேண்டு மானால், இந்தத் தலைவர்கள்தான் இந்தக் கூட்டத்துக்கு சிம்ம சொப்பனம் என்பதும் உள்ளடக்கம்.

அது சரி... தலைகீழாக நின்று மூக்கால் தண்ணீர் குடித்தாலும், தமிழ்நாட்டில் ‘டெபாசிட்’ வாங்க முடியவில்லையே - யாரைக் கண்டு அஞ்சுகிறது பி.ஜே.பி. வகையறா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner