எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

காசாமாரி, மே 2 அசாம் மாநிலத்தில் நகாவ் மாவட்டம் காசாமாரி பகுதியில், மாடு திருடியதான குற்றச்சாட்டில் கிராம மக்கள், இரண்டு இளைஞர்களை அடித்து கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது.

ஷினாகத் அபு ஹனீஃபா மற்றும் ரியாஜுதீன் அலி என்றுஅடையாளம் காணப் பட்டுள்ளஅவ்விருஇளைஞர் களும்20அல்லது22 வயதுள்ள வர்கள்ஆவர். இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தால், அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்திருக்கிறது. கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும் மேய்ச்சல் நிலத்தில் இருந்து மாடுகளை திருட்டுத்தனமாகஓட்டிச்செல் லும்போதுஅவர்களைகையும்- களவுமாக பிடித்ததாக காவல் துறையினரிடம் கூறியுள்ளனர்.

காவ் மாவட்ட காவல்துறை தலைவர் தப்ராப் உபத்யாய் கூறும்போது, “சம்பவ இடத் திற்கு காவல்துறையினர் விரைந்தபோது, வன்முறைக் கும்பலால் மிகவும் மோசமாக தாக்கப்பட்டநிலையில்இளை ஞர்கள்இருந்தனர்.சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதிலும், பலத்த காயமடைந்திருந்த அவர்களை காப்பாற்ற முடியவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

காசிமாரியில் காவல்துறை சரகத்தில் இருந்து ஜஜோரி காவல்துறைசரகம்வரை,ஒன் றரைகிலோமீட்டர்தொலை வுக்குஅவ்விரு இளைஞர்களை யும்துரத்தித்துரத்திவன் முறைக்கும்பல் தாக்கியிருக் கிறது.

இதுபோன்ற நிகழ்வு இது வரை வடகிழக்கு மாநிலப் பகுதியான அசாம் மாநிலத்தில் நடைபெற்றதில்லை. திருட முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இளைஞர்களை மக்கள் கும்பல் அடித்துக் கொன்றது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

கொல்லப்பட்டவர்களின் உறவினர்களின் புகாரின் அடிப் படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தாலும், சம்பவம்தொடர்பாகஇது வரை யாரும் கைது செய்யப் படவில்லை. பசு பாதுகாவல் அமைப்புடன் தொடர்புடைய எவரும், இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் ஏதும் இல்லை என்றும், இந்த விவகாரத்தில் பாரபட்சம் இன்றி விசாரணை நடத்தப்படும் என்று காவல் துறை கண்காணிப்பாளர் குறிப் பிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner