எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, மே 3 ரயில்வேத்துறையில் உணவு வழங்கல் பிரிவில்  நடைபெற்று வருகின்ற முறைகேடுகள்குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் ரூ.1,241, ரூ.25 மதிப்பிலான 100 கிராம் தயிர்  ரூ.972 தனியார் பால்பொருள் நிறுவனத் தயாரிப்பு தயிர் ஒரு லிட்டர் ரூ.9,720 என்பது போன்ற தகவல்கள் வெளியாயின.

சமூக ஆர்வலர் அஜய் போஸ்

மத்திய ரயில்வேத் துறையில் உணவுப் பிரிவு கடும் இழப்புகளை சந்திப்பதாக கேள்விப்பட்ட சமூக ஆர்வலர் அஜய் போஸ் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பித்திருந்தார்.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கப்பட்டபோது, அதற்கு மத்திய ரயில்வேத்துறையின் சார்பில் அளித்த  பதிலில் இந்த அதிர்ச்சிகரமானத் தகவல் வெளியாகியுள்ளது.

அஜய் போஸ் கூறும்போது,  “2016 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில் விண் ணப்பித்தேன். ஆனால், மத்திய ரயில்வே கேட்டரிங் துறையிலிருந்து எந்தவிதமான பதிலும் அளிக்கப்படவில்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி விண் ணப்பித்த போதிலும்,  தகவல்களை மறைக்க முயல்கிறார்கள் என்பதை உணர்ந்து, அவற்றை வெளிக்கொணர விரும்பினேன். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் மேல்முறையீடும் செய்தேன். அதன்பிறகு15நாள்களுக்குள்ளாகநான் கேட்டுள்ள விவரங்களை அளிக்கு மாறு ரயில்வேத்துறைக்கு மேல்முறை யீட்டின்போது உத்தரவானது. ஆனாலும், பல மாதங்களுக்குப் பின்னரே பதில் கிடைத்தது’’ என்றார்.

மேல்முறையீட்டைமத்தியரயில்வேத் துறைபுறக்கணித்த நிலையில், அஜய் போஸ்இரண்டாம்முறையாகவிண்ணப் பித்தபோது, மத்திய ரயில்வேத்துறையிட மிருந்து பதில் வந்தது.

இதுகுறித்து அஜய் போஸ் கூறும்போது,

“இம்முறைவிரிவான தகவல் கிடைக்கப் பெற்றது. அந்த தகவல்கள் அதிர்ச்சி அளிப்ப வையாக இருந்தன’’ என்றார்.

விற்பனை விலையைவிட பலமடங்கு அதிக விலையில் கொள்முதலா?

2016 ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் விலை ரூ.1,241 என்கிற அளவில் 58 லிட்டர் சமையல் எண்ணெய் ரூ.72,034 என்கிற அளவிலும், டாடா நிறுவன உப்புத் தூள் விற்பனை விலையாக உள்ள ரூ.15க்குப் பதிலாக ரூ.49 என்கிற அளவில் 150 பாக்கெட்டுகள் ரூ.2,670க்கும்,தண்ணீர்மற்றும்பிறகுளிர் பானங்கள் ரூ.59க்கும் மத்திய ரயில் வேயில் வாங்கப்பட்டுள்ளதாகக் குறிப் பிடப்பட்டுள்ளது. சமோசா, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றில் உரிய விலை குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருள்களுக்கான கிடங்கில் இருப்பில் முரண்பாடு

பொருள்களுக்கான கிடங்கில் வாங்கப் பட்ட பொருள்கள் மற்றும் இருப்பு குறித்த தகவல்கள் ஒன்றுக்கொன்று முரண் பட்டவையாக இருக்கின்றன. மத்திய ரயில்வே உணவுப்பிரிவில் சமையலறைக்கு 90 கிலோ மற்றும் ரயிலில் உணவகப்பிரிவான ஜன்ஆகார் கேண்டீனுக்கு 360 கிலோ என கோதுமை மாவு 450 கிலோ அளிக்கப் பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்ட நிலை யில், 250 கிலோ கோதுமைமாவு ரூ.7,680 விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாகக் குறிப் பிடப்பட்டுள்ளது. 20 கிலோ மைதா மட்டுமேவாங்கிவிட்டு 35 கிலோ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 255 கிலோ பாசுமதி அரிசி வாங்கிவிட்டு,  சமையலறைக்கும், குர்லாஹஜ்ரத் நிசாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில் கேண்டீனுக்கு 745 கிலோ வழங் கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அஜய்போஸ்கூறும்போது,“ரயில்வே அளித்துள்ளதகவல்களின்படி,ஜன் ஆகார் கேண்டீன்கள் மற்றும் விற்பனை யகங்கள், எல்டிடி மற்றும் இதர ரயில் நிலையங்களிலுள்ளஉணவகங்கள்இழப் பிலேயே தொடர்ந்து இயங்கிக் கொண்டி ருக்கின்றன. ஆனால், தகவல்பெறும் உரிமைச்சட்டத்தின்படி பெறப்பட்ட தகவல்கள் உண்மையை உணர்த்தியுள்ளன’’ என்றார்.

கோட்ட மேலாளர் விசாரணை

ரயில்வேத்துறையின் கோட்ட மேலாளர் ரவீந்திர கோயல் கூறும்போது, “நிச்சயமாக இது அச்சுப்பிழையாகத்தான் இருக்க வேண்டும். இதுகுறித்து விசாரணை செய்வேன்’’ என்றார்.

மத்திய ரயில்வேத்துறையின் மேனாள் பொதுமேலாளர் சுபோத் ஜெயின் கூறும்போது, “இதுபோன்ற உணவுப்பொருள்களை வாங்குவதற்கு முறையான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. பொருள்களை வாங்குவதற்கான குழுவில்தான் விலை முடிவு செய்யப்படுகின்றன’’ என்றார்.

ரயில்வேத்துறையைச் சார்ந்தவரும், மத்திய ரயில்வேத்துறைக்கு நெருக்கமாகவும் உள்ள பெயர் வெளியிட விரும்பாத டில்லியில் உள்ள உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், “இது வெறுமனே அச்சில் பிழையானதாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. கடந்த காலங்களில் சிஎஸ்டிஎம் கேட்டரிங்கில் நடைபெற்ற முறைகேடுகளின் காரணமாக இருக்கலாம். ஆண்டுதோறும், கோடிக்கணக்கில் ரயில்வேத்துறை நட்டமென கூறி வருகிறது. ஆகவே, இதுபோன்றவற்றை கவனமாக பார்க்க வேண்டும்’’ என்றார்.

ரயில் பயணிகள் சங்கம்

ரயில்வே கோட்ட பயன்பாட்டாளர்குழுவின் உறுப்பினரும், ரயில் பிரவாசி சங்கத்தின் தலைவருமாகிய சுபாஷ் குப்தா கூறும்போது, “இது மிகவும் மோசமானதும், ரயில்வேத்துறையில் உள்ள மூத்த அலுவலர்களால் முக்கியமாக பார்க்கப்பட வேண்டியதுமான பிரச்சினையாகும். ஏராளமான பொருள்கள் அதிகமாக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளன. வாங்குவதற்கும், வழங்கப்படுவதற்கும் இடையே உள்ள பெரிய அளவிலான வேறுபாடு என்பது அச்சுப்பிழையாக இருக்க முடியாது. இது நிண்டகாலமாக நடந்து வருகின்றது. பயணிகள்தான் இழப்புக்கு ஆளாகிறார்கள். இதுபோன்ற ஊழல் முறைகேடுகள்தான், ரயில்வேத்துறையே நட்டத்தில் இயங்குவதாக கூறுவதற்கு காரணமாக உள்ளன. ரயில் கட்டணம் உயர்கிறது, பயணிகளுக்கு செய்யப்படவேண்டிய வசதிகளும் குறைந்துபோகின்றன. இம்முறைகேடுகளில் தொடர்புள்ள அலுவலர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என்றார்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner