எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மே 3 தரையில் இருந்து கிளம்பிச் சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் 3- ஆம் வரிசை பிரமோஸ் ஏவுகணை சோதனையை இந்திய ராணுவம் நேற்று (2.5.2017) அந்தமான் நிகோபார் தீவுகளில் நடத்தியது. அங்கு இருந்த ஒரு நடமாடும் ஏவு தளத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த ஏவுகணை சிறிது நேரத்தில் தனது இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

இதுபற்றி மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,

பிரமோஸ் ஏவுகணையில் பிளாக்-3 என்னும் வரிசையைச் சேர்ந்த தரம் மேம்படுத்தப்பட்ட இந்த சூப்பர்சானிக் ஏவுகணை தரையில் உள்ள இலக்கின் மய்யப் பகுதியை மிகவும் துல்லியமாக தாக்கக் கூடியது ஆகும். இத னால் தாக்கப்படும் இலக்கு முற்றிலுமாக சிதைக்கப்படும். இது நமது ஏவுகணை தொழில் நுட்பத்தில் ஈடுஇணையற்றதாக அமைந்துள்ளது என்றார்.

இந்தியாவின் பிரமோஸ் பிளாக்- 3 ஏவு கணை, சீன ராணுவத்தின் டி.எப்.21 டி என்னும் ஏவுகணைக்கு சவால் விடும் வகையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner