எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நடந்தது என்ன?

‘நீட்’ தேர்வு விவகாரம்:

அதிர்ச்சியளிக்கும்  குடியரசுத் தலைவர் மாளிகை விளக்கம்

புதுடில்லி, மே 6 ‘நீட்' தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக அரசு தங்களை அணுகவில்லை என குடியரசு தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

‘நீட்' விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் விளக்கம் கேட்டிருந்தார். அவருக்கு குடி யரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ள விளக்கத்தில்  ‘நீட்' தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக அரசு சார்பில் எந்த சட்ட முன்வடிவும் எங்களுக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வடிவு பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகை யிலிருந்து இப்படி ஓர் அறிவிப்பு வெளிவந்துள்ளதே!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். அதனை மத்திய அரசுதானே குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருக்கவேண்டும். அப்படி யென்றால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு அனுப்பாததன் மர்மம் என்ன?

சமூகநீதி என்றால் - ஒரு எரிச்சல்- மாற்றுக் கொள்கை பி.ஜே.பி. அரசுக்கு - என்பதுதான் இதற்குக் காரணமா?

நடந்தது என்ன?

விளக்கம் தேவை!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner