எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மதுரையில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா என்ற பெயரில் பக்த கோடிகளின் பாமரத்தன வெளிச்சம் உலகிற்குப் பகிரங்கமாக்கப்படுகிறது.

இதில் உள்ள மூடத்தனத்தின் முடைநாற்றம் பற்றி யாருமே வெட்கப்படுவதில்லை.

இத் திருவிழாக்களையெல்லாம், வடலூர் வள்ளலார் போன்ற பட்டுத் தெரிந்த பரிபக்குவமடைந்த அறிவாளிகள் 'எல்லாம் பிள்ளை விளையாட்டு' என மனம் நொந்து தனது ஆறாம் திருமுறை (அது முழுக்க முழுக்க ஒப்புதல் வாக்குமூலம் -

சிஷீஸீயீமீssவீஷீஸீணீறீ ஷிtணீtமீனீமீஸீts) யில் பாடியுள்ளார்!

இவ்வாண்டு அழகர் ஆற்றில் இறங்கக்கூட தண்ணீர் இல்லாத அவ்வளவு கடும் வறட்சி, பஞ்சம்! "எல்லாம் அவன் செயல்" "அவனின்றி ஓரணுவும் அசையாது" என்று இன்னமும் உளறும் மூடமட்டிகள், அழகருக்கே, தண்ணீர் பஞ்சம் மதுரையில் என்றால் சாதாரண மக்களின் கதி எவ்வளவு பரிதாபத்திற்குரியது.

எண்ணிப் பார்க்கிறீர்களா?

இங்குள்ள பார்ப்பன அல்லது தங்களை பார்ப்பனீயத்திற்கு அடகு வைத்துக் கொண்ட ஊடகங்களும், ஏடுகளும் பத்து லட்சம் பக்தர்கள் திரண்டு பரவசம் ஆயினர் என்று நிரந்தர புருடாவை இரண்டொரு நாளில் அவிழ்த்து விடுவர்!

மீனாட்சிக்கும், சுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாணமாம்! கள்ளழகர் மீனாட்சி அம்மனின் சகோதரராம்! தங்கையின் கல்யாணத்தைக் கண்டுகளிக்க கள்ளழகர் புறப்பட்டு வருகிறார்; வழியில்  வைகை  ஆற்றைக் கடந்து வர வேண்டும். அதற்கு ஆயத்தமாகவே வருகிறார். இப்போதெல்லாம் வைகையை கடக்க நீந்தவோ, ஆழம் பார்க்கவோ, தண்ணீர் கிடையாது. எல்லாம் கட்டாந்தரை, ஆழ்துளைக் கிணறு போட்டாலும் தண்ணீர்ப் பஞ்சம்தான்! அதனால் பல விஞ்ஞான மேதைகள் இருக்கும் குட்டைகள் மேல் தெர்மாகோல் ஷீட் போட்டு நீராவியாகி அதுவும் குறைந்து விடாமல் தடுக்க அபூர்வ யோசனை கூறியுள்ளார்களாம்!

(அடுத்த நோபல் பரிசு மதுரைக்குத் தான் போலிருக்கிறது! இத்தகைய அறிவுக் கொழுந்துகள் வேறு எங்கே உலகில் கிடைக்கும்?)

ஒண்ணரை முழ  சாமி சிலைக்கு பச்சைப் பட்டாடை உடுத்தி, கொழுகொழு எனக் கொழுத்த பட்டர்களான பார்ப்பனத் திருமேனிகள்தான் தாலியை மீனாட்சி அம்மன் கழுத்தில் கட்டுவர். அந்தோ அவர் அசையாப் பொருள் தானே, மீனாட்சி பொம்மையைப் போல! இதைப் படமெடுத்து ஊடகங்கள் போட்டுப் பார் முழுவதும் நமது விஞ்ஞான விந்தையைப் பறை சாற்றுவர்!

இதில் கூடுதல் வேடிக்கை கள்ளழகர் நாளை (8.5.2017) மதுரைக்குப் புறப்படுகிறார்.

உலகத்தைக் காப்பாற்றப் புறப்பட்ட இவர் 5000 போலீசார் பாதுகாப்புடன் புறப்படுகிறார்!

தன்னைக் காப்பாற்றிக் கொள்ளாத கடவுள் உன்னைக் காப்பாற்றுவானா? என்று 'சுருக்கென' கேட்ட தந்தை பெரியாரை நினைத்துக் கொள்ளாதீர்கள்! அப்புறம் 'நாஸ்திகர்' ஆகி விடுவீர்!

அவர் "புரோகிராம்" இதோ:

நாளை (8.5.2017) மாலை புறப்படுகிறார் தங்கப் பல்லக்கில் (அவர் விவசாயிகளின் தற்கொலை, வறட்சி, பட்டினி பற்றியெல்லாம் நேரில் பார்ப்பதற்கு நமது பிரதமர் மோடி, தமிழக அரசு போலவே பல்லக்கில் 'ஜாலியாக' பவனி) வருகிறார்.

மே 10ஆம் தேதி மாநகர எல்லையைத் தொடும்போது எதிர் சேவை தொடங்குகிறதாம் - காலை 6.15 மணி - 7 மணிக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் (ஓடாத குதிரைதான்) வைகை ஆற்றில் எழுந்தருளி;   "என்னே வாய்மையே வெல்லும்" உண்மைகள்?

இடையில் இரவில் தங்கல், இன்னும் எத்தனையோ இரவுக் காட்சிகள் - துலுக்க நாச்சியாருக்கு வரம் அளித்தல் உட்பட,

கால தாமதம் - மீனாட்சி சுந்தரேச "திருக்கல்யாணம்" முடிந்துவிட்டது என்ற செய்தி கேட்டு வெகுண்டார்; திரும்பி விட்டார் கோபத்துடன்.

இப்படி 100, 200 வருஷங்களாக நடக்கிறது! போன வருஷம் லேட்டா போனார்; இந்த வருஷமாகிலும் 'பஞ்ச்சுவலா' போக வேண்டாமா?

இந்த மாதிரி வருஷா வருஷம் கல்யாணம்! வருஷா வருஷம்  லேட்டு - திரும்பும் விளையாட்டு - அய்யகோ!

"எங்கள் நாட்டிற்குகெந்த நாடு ஈடு? - பாடு, பாடு!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner