எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

சிறீநகர், மே 7  காஷ்மீர் மாநிலத்தில் செயல்படும் ராணுவப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் இந்து மத போதனைகளும், கருத்துகளும் திணிக்கப்படுவதாக பிரிவினை வாதத் தலைவர் கிலானி குற்றம்சாட்டியுள்ளார்.

இதன் வாயிலாக மாண வர்களை மதரீதியாக பாகு படுத்த அப்பள்ளிகள் முயலுவ தாகவும் அவர் கூறியுள்ளார்.

போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மூண்டு வரும் மோத லால் காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதன் விளைவாக பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ராணுவப் பள்ளிகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ராணுவப் பள்ளிகளின் செயல்பாடு குறித்து கிலானி கடுமையான விமர் சனத்தை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித் திருப்பதாவது:

மதரீதியான போதனை களும், கருத்துகளும் காஷ்மீர் ராணுவப் பள்ளிகளில் கற்பிக் கப்படுகின்றன. அத்தகைய பாடங்கள் மாணவர்களிடம் வலுக்கட்டாயமாகத் திணிக்கப் படுகின்றன. இதன் வாயிலாக மாணவர்களிடையே வேற்று மையைப் புகுந்த அப்பள்ளிகள் முயலுகின்றன.

இதுபோன்ற பள்ளிகளில் தங்களது குழந்தைகளை பெற் றோர்கள் சேர்க்கக் கூடாது. ஒரு சில ஆதாயங்களுக்காக இத்த கைய பள்ளிகளில் குழந்தை களைச் சேர்த்தால் அவர்களது எதிர்காலமே பாதிக்கப்படும் என்று அதில் தெரிவித்திருந்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner