எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெங்களூர், மே 7 காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க பெங்களூரில் மே 9-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத் துக்கு கர்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட நதிநீர்ப் பயன்பாட்டு மாநிலங்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதற்கு நிபுணர் குழுவை அமைக்குமாறு, கர் நாடக அரசுக்கு மத்திய அரசு பரிந்துரைத்து கடிதம் எழுதி யுள்ளது.

மேலும், மேகதாட்டு பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளது. எனவே, மேக்கே தாட்டு அணை தொடர்பாக, கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற கர்நா டக அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் யோசனை மற்றும் மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத் தறிய மாநில அரசு விரும்பு கிறது. இதற்காக, பெங்களூரி ருவில் மே 9-ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner