எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அலகாபாத், மே 8 உத்தரபிர தேசத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து எம்பியாக இருந்த யோகி ஆதித்யநாத்முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு பல்வேறு அடாவடி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்.

முன்னதாக தேர்தல் சமயத் திலும், அதற்கு முன்னதாகவும் பல்வேறு சர்ச்சைக்குரிய பேச் சுகளை யோகி ஆதித்யநாத் பேசி அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியவர். கடந்த 2007- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், இந்து இளைஞர் கொலை தொடர்பாகச் சர்ச்சைக்குரிய கருத்தினைத் யோகி தெரிவித் தார். இதையடுத்து, கோரக்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கலவரம் நடந்தது. இதில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்தக் கலவரத்தில் அப் போது எம்பியாக இருந்த யோகி ஆதித்யநாத் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு இன்னும் நடைபெற்று வருகிறது. கலவரத்தில் பாதிக் கப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல்  செய்யப்பட்ட மனுவில் மாநில அரசின் விசாரணை நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில்,தற்போதையமுதல் வராக இருக்கும் யோகி ஆதித்ய நாத் அரசின் தலைமைச் செய லாளருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

இதுகுறித்து மாநில அரசின் விசாரணை நிலவரம் குறித்து தலைமை செயலாளர் அறிக்கையை மே 11 ஆம் தேதிக்கு முன்பாக  தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. ஏற்கெ னவே கடந்த 2007 ஆம் ஆண்டு கலவரத்தின்போது இது குறித்து தனிப்பட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கு தொடர்ந்ததையடுத்து யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட 3 பேர்மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner