எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மண்டியா, மே 8 மழை வேண்டி கழுதைகளுக்கு திரு மணம் செய்து வைத்தல், தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தல் என வறட்சி பாதித்த பகுதிகளை சேர்ந்த மக்கள் நூதன வழிபாடு நடத்தி வருகிறார்களாம். அதேப் போல் மண்டியா மாவட்டத்தில் மழை வேண்டி 2 சிறுவர்களுக்கு திருமணம் நடத்தி கிராம மக்கள் வழிபாடு நடத்திய மூடத்தன சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதுபற்றிய விவரம் வரு மாறு:-

காவிரி பாசன பகுதியான மண்டியாமாவட்டம் கே.ஆர். பேட்டை தாலுகா சான்டிபாச்சஹள்ளி கிராமத் திலும் கடுமையான வறட்சி நிலவுகிறது.இதனால் அங்கு குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள்அவதிப்பட்டுவரு கிறார்கள்.அத்துடன்பாசனத் திற்கு தண்ணீர் இல்லாததால் பயிர்கள்கருகும்நிலை யில்உள்ளன.மேலும்கால் நடைகளும் தீவனம் கிடைக் காமல் அவதிப்படுகின்றன.

இதனால் மழை வேண்டி வருண பகவானுக்கு நூதன வழிபாடு நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனராம். அதாவது, 2 சிறுவர்களுக்கு திருமணம் நடத்தி சிறப்பு பூஜை நடத்த அவர்கள் திட்டமிட்டு, நேற்றுமுன்தினம் 2 சிறுவர்களை அலங்கரித்தனர். அதில் ஒரு சிறுவனை மண மகள் போலவும், மற்றொரு சிறுவனை மணமகன் போலவும் கிராம மக்கள் அலங்கரித்தனர். பின்னர் இருவரையும் ஊரின் முக்கிய வீதிகள் வழியாகவும் அவர்களை அழைத்து வந்தனர். பின்னர் அந்தப் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடத்தினராம். பின்னர் அந்த கோவிலில் மழை வேண்டி வருண பகவானுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத் தினராம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner