எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘‘தமிழக அரசின் சாதனைகளை மலர்களாக வெளியிட்டு வந்த, மாநில செய்தி மக்கள் தொடர்பு துறை, மத்திய பா.ஜ ., அரசின் மூன்றாண்டு சாதனைகளை, மலராக வெளியிட முடிவு செய்து இருப்பது, அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில், ஆட்சியை தக்க வைத்து கொள்ளவும், வருமான வரித்துறையினரின் பிடியிலிருந்து தப்பவும், மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்க வேண் டிய கட்டாயம், முதல்வர் பழனிசாமி அரசுக்கு ஏற்பட்டு உள்ளது.

எனவே, மத்திய அரசையோ, மத்திய அமைச்சர்களையோ, விமர்சிக்க வேண்டாம்  என, அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

புகழ்ந்தார்

அதற்கேற்ப, ‘வறட்சி நிவாரண நிதிக்காக, உத்தர பிரதேசத்தை விட, தமிழகத்திற்கு அதிக நிதியை, பிரதமர் மோடி ஒதுக்கினார்’ என, அமைச்சர்,உதயகுமார் புகழ்ந்து தள்ளினார். டில்லி சென்ற, அமைச்சர் தங்கமணி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

‘தமிழக அரசை, பா.ஜ., ஆட்டி வைக்கிறது’ என, தமிழக கட்சிகள், குற்றம் சாட்டி வரும் நிலையில், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர், குமரகுருபரன், மத்திய அரசின், மூன்றாண்டு சாதனை மலர் தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளார்.

இது தொடர்பாக அவர், ‘மத்திய அரசின் திட்டங்களை தொகுத்து, வெற்றிக் கதைகளாக வழங்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கலெக்டர் ஒப்புதல்

குமரகுருபரன் உத்தரவில் கூறியிருப்ப தாவது:

இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்காகவும், பயனுக்காகவும், மத்திய அரசு எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும், மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான தகவல்களை, சம்பந் தப்பட்ட மத்திய அரசு அலுவலர்களை அணுகி பெற வேண்டும்.

அவற்றை, புகைப்படங்களுடன், வெற்றிக் கதையாக, கலெக்டர் ஒப்புதல் பெற்று, தலைமையிடத்துக்கு தபால் மூலமாகவும், This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்றஇ-மெயில் முகவரிக்கும், மே, 11-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.''

- இப்படி ஒரு செய்தி ‘இனமலர்’ நாளேட்டில் இன்று (9.5.2017) 5 ஆம் பக்கத்தில் வெளியாகி உள்ளது.

இது உண்மையாக இருக்குமேயானால் இதைவிட மிகவும் கேவலமான தலைக்குனிவு தமிழ்நாட்டிற்கு வேறு இருக்கவே முடியாது!

மத்திய அரசு - மோடி அரசு - தமிழ்நாட்டில் உள்ள அ.தி.மு.க.வினை இரண்டாக்கிய நிலையில், அவ்விரண்டு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு தங்களை பா.ஜ.க.விடம் குத்தகைஒப்பந்தம்போட்டுவிட்டு,சரணா கதியில் யாருக்கு முதலிடம் என்றா போட்டி யிடுவது?

‘அம்மா அரசு, அம்மா அரசு’ என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சும்மா சும்மா  கூறும் பதவிப் பசியால் அலையும் வீராதி வீரர்களே, அவர் இப்படியா நடந்துகொண்டார்? டில்லிக்குச் சலாம் போட்டாரா?

மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு இதுவரை என்னென்ன முக்கிய உதவிகள் செய்தது?

காவிரி ஆணையத்தை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் புறந்தள்ளி அமைக்காது, கருநாடகத்தை மகிழச் செய்து மகுடம் தேடிடும் நிலைக்காகவா அதனை தமிழக அரசு ‘‘சாதனை’’ என்று மகிழ்ந்து மலர் வெளியிடுகிறது?

‘நீட்’ தேர்வுக்குச் சட்டம் இயற்றியும், குடியரசுத் தலைவர் மாளிகைக்கே கூட செல்லவில்லை என்ற அதிர்ச்சியூட்டக் கூடிய செய்திதான் தமிழக அரசு - மத்திய அரசை பாராட்டுவதற்குக் காரணமா?

டில்லியில் 41 நாள்கள் போராடிய விவசா யிகளைக் கண்டு ஆறுதல் கூறவோ, தேசிய வங்கிக் கடன்கள் தள்ளுபடிக்கு வழி வகை பெறவோ முடியாமல் விவசாயிகள் வஞ்சிக்கப்படுகின்றனரே - அதற்காகவா சாதனை மலர்?

நமக்குப் புரியவில்லை!

மடியில் கனம்; எனவே, வழியில் பயம்!

ஆட்டுவிக்கும் நிலை; ஆடுகின்றார்களா?

அய்யோ! ஏ, தாழ்ந்த தமிழகமே!

உன் நிலை இவ்வளவு கீழிறக்கத்துக்கா செல்லவேண்டும்?


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner