எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘இறங்குகிறாரா - இறக்கப்படுகிறாரா?'

மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இன்று இறங்குகிறார்- இன்று இறங்கு கிறார் என்கிறார்களே, அவராகவே இறங்குகிறாரா? அல்லது இறக்கப்படுகிறாரா?

235 ஆம் இடம்

மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் வெளியிட்ட தூய்மை நகரத் தர வரிசைப் பட்டியலில் சென்னைக்குக் கிடைத்திட்ட இடம் 235. (பலே பலே மாநகராட்சி)

காலியிடங்கள்

கோவை - வேளாண் பல்கலைக் கழகத்தில் 206 உதவி வேளாண் அதிகாரிகள் இடம் காலியாம். (நிர்வாகம் எப்படி நடக்குமாம்?) இப்பொழுதுதான் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

லட்சணம்...???

சென்னை வடபழனியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபகரமாக மரணம் அடைந்துள்ளனர்.

இந்தக் கட்டடம் புறம்போக்கு நிலத்தில் விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டிலேயே மாநகராட்சியால் சீல் வைக்கப்பட்டிருந்தும், அந்த வீட்டில் குடியிருக்க அனுமதித்தது யார்?
நிர்வாக இலட்சணம் இதுதானா?

எச்சரிக்கை!

விழுப்புரத்தில் கைக்கடிகார பேட்டரியை விழுங்கிய ஒன்றரை மாதக் குழந்தை உயிரிழந்தது.
(குழந்தைகள் உள்ள வீட்டில் கைக்கு எட்டிய தூரத்தில் எந்தப் பொருளையும் வைக்கவேண்டாமே!)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner