எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அம்பானியின் கனவுத் திட்டமான ‘ஜியோ’ தொடங்கிய போதும் மோடியையே பிரதான மாடல் ஆக்கியிருந்தார்கள். 120 கோடி இந்தியர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்ட அந்த ‘ஜியோ’ சலுகை குறிப்பாக ‘டிஜிட்டல் இண்டியா’ எனும் கனவில் இருந்த மோடிக்குச் சிறப்பு செய்யும் விதமாக அவர் படத்தோடு வெளியிடப்பட்டிருந்தது.

ஜியோ விளம்பரத்தில் மோடி நடித்தாரா எனச் சர்ச்சைகள் எழுந்தன - அது அவரது கோட் பாக்கெட்டைப் பிடித்துத் தொங்கியது அனைவரும் அறிந்ததே.

இலவசமாக இன்டர்நெட் வசதி அளித்து பல கோடி வாடிக்கையாளர்களை அந்த நிறுவனம் அள்ளியதும் குறிப்பிடத்தக்கது. மோடி தலைமையிலான மத்திய ஆளும் அரசு பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டபோது நாடே அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் போது,

பேடிஎம் நிறுவனம், இந்த பணமதிப்பு நடவடிக்கையை தங்களுக்கானதாக மாற்றிக் கொண்டது. அதுமட்டுமல்லாமல் மோடியையே மாடலாக வைத்து. வாழ்த்துச் சொல்வதைப் போல வித்தியாசமாகக் கூறிய அந்த விளம்பரத்திற்கும் மோடி முகம் காட்டுகிறார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner