எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராஜாஜியல்ல!

இன்று பெரும்பாலான வீடு களில் குழாய்மூலம் குடிநீர் விநி யோகமாகிறதல்லவா! முதன் முத லில் இதை அறிமுகப்படுத்தியவர், யார்தெரியுமா?பெரியார் ஈ.வெ.ராமசாமிதான். பெரியார், ஈரோடு நகர சபைத் தலைவராக இருந்தபோது மக்கள் குடிநீருக்காக சிரமப்படுவதைப் பார்த்தார். 1919 இல் இந்தியாவிலேயே முதன் முதலில் நகராட்சி மூலமாக காவிரி ஆற்றிலிருந்து நீரை மேல்நிலைத் தொட்டிக்கு ஏற்றி நிறைத்து பின் வீட்டிற்கும் குழாய்மூலம் விநி யோகித்தார். இந்தத் தண்ணீர் தொட்டியைத் திறந்து வைத்தவர் யார் தெரியுமா? மூதறிஞர் ராஜாஜி. இன்றும் ஈரோடு வ.உ.சி. பூங்காவில் அந்த மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி பயன்பாட்டில் உள்ளது.

- அ.யாழினி பர்வதம், சென்னை ‘குமுதம்‘, 5.4.2017

இதில் ஒரு தவறான தகவல் இடம்பெற்றுள்ளது.

ராஜகோபாலாச்சாரி என்றவு டன்,உடனேராஜாஜிதான்நினை விற்கு வரும் போலும்! உண்மை யில் இந்தியாவிலேயே முதன் முதலாகசுத்திகரிக்கப்பட்டகுடி நீரைமக்களுக்குவழங்கியமுதல் நகராட்சித் தலைவர் தந்தை பெரியாரே!அதனைத்திறந்து வைத்தவர் பி.ராஜகோபாலாச் சாரியார்அய்.சி.எஸ்.(ராஜாஜியல்ல) - பெருங் காவூர் ராஜகோபாலாச்சாரி என்ப வர்தான் திறந்து

வைத்தார்.
1914 ஆம் ஆண்டு இவர் சென்னை மாகாண நீதித்துறையின் முதல் இந்தியச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.
1917 ஆம் ஆண்டு சென்னை ஆளுநரின் நிர்வாகக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்திய அரசுச் சட்டம், 1919 இன்படி சென்னையின் முதல் சட்டமன்றம் உருவாக்கப்பட்டபோது, அதன் முதல் இந்தியத் தலைவராக 1920 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று ஆளுநர் லார்ட் வெலிங்டன் பிரபுவால் நியமிக்கப்பட்டார்.

மூன்றாண்டுகள் அப்பதவியில் நீடித்தார். 1923 இல் பனகல் அரசரின் நீதிக்கட்சி அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு தூண்டுகோலாக இவர் இருந்தார் என்றும்கருதப்படுகிறது.1923 இல் இவரது பதவிக் காலம் முடிவுக்கு வந்த பின் எல்.டி .சாமிக்கண்ணுப்பிள்ளைசட்டமன் றத் தலைவரானார். இந்த பி.இராஜ கோபாலாச்சாரி, லண்டனிலுள்ள இந்தியக் கவுன்சிலின் உறுப்பின ராக நியமிக்கப்பட்டார். இரண் டாண்டுகள் அங்கு பணியாற்றிய பின் உடல்நலக் குறைவு காரண மாக இந்தியா திரும்பினார். 1927 இல் மரணமடைந்தார்.

தந்தைபெரியாருக்குமிகவும் நெருக்கமானவர் - தந்தை பெரியார் ஈரோடு நகராட்சித் தலைவராக ஆகும் நிலையில், உள்ளூர் விஷமிகள் அவர்மீது புகார் கடிதங்களை எழுதினார்கள். அந்தச் சமயம் பி.ராஜகோபாலாச்சாரியார் ஸ்தலஸ்தாபன உறுப்பினராக இருந்தார். விசாரணை நடத்தி புகார்கள் பொய்யென்று கூறித் தள்ளுபடி செய்தார்.

தந்தை பெரியார், தாம் வகித்த 29 பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரசில் பணி யாற்ற முடிவு செய்தபோது, இந்தப் பி.ராஜகோபாலாச்சாரியார் ஈரோடு வந்து, ‘ஈ.வெ.ரா.வுக்கு ராவ்பகதூர் பட்டம் வழங்க சிபாரிசுசெய்திருப்பதாகவும்,ராஜி னாமாவைவாபஸ்வாங்கிக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண் டார். பெரியாரோ அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது வரலாறு.
- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner