எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- தளபதி மு.க.ஸ்டாலின் பேட்டிசென்னை, மே 11 தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் வைர விழா நிகழ்ச்சியில் பி.ஜே.பி.யை ஏன் அழைக்கவில்லை என்ற கேள்விக்கு தி.மு.க. செயல்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பதில் கூறியுள்ளார்.
விவரம் வருமாறு:

செய்தியாளர்: அரசியல் கட்சிகளின் தலைவர்களை எல்லாம் பாஜகவுக்கு எதிராக திமுக ஒன்றிணைக்கிறது என்று பாஜக தலைவர்கள் சொல்லி வரும் நிலையில் மற்ற கட்சிகளின் தலைவர்கள் வரவேற்று இருக்கின்றார்களே?

தளபதி மு.க.ஸ்டாலின்: இதுபற்றி கேட்பதற்கான அருகதையே பாஜகவின ருக்கு இல்லை. அவர்களை மட்டம் தட்டிப்பேசுவதாக யாரும் கருத வேண்டாம். காரணம் என்னவென்றால், திராவிட இயக்கங்களை ஒழிப்பதுதான் எங்களுடைய முதல் வேலை என்று அவர்களே தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், இப் படி சொல்பவர்களை அழைத்து வந்து தலைவர் கலைஞர் அவர்களின் சட்டமன்ற வைரவிழா நிகழ்ச்சி மேடையில் உட்கார வைத்து அவர்களுக்கு தர்ம சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த நாங்கள் தயாராக இல்லை.

செய்தியாளர்: அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து ஆளுநரை சந்தித்து முறையிடுவீர்களா?

தளபதி மு.க.ஸ்டாலின்: ஏற்கெனவே பலமுறை மாண்புமிகு ஆளுநர் அவர்களி டம் முறையிட்டு இருக்கிறோம். மீண்டும் மீண்டும் அவரிடத்தில் முறையிடுவதால் எந்தப் பலனுமில்லை. எனவே, இதை யெல்லாம் இனி மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கான முயற்சியில் ஈடுபடுவோம்.

இவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner