எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, மே 11
ரூபாய் நோட்டு தடை செயல்படுத்தப்பட்டது தொடர்பான விவரங்களை வெளியிடுவது,நாட்டின்பொரு ளாதாரத்துக்கு தீங்கு விளைவிக் கும் செயல் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டை ஒழிக்கும் வகையில், பழைய 500 மற் றும் 1,000 நோட்டுக்கு தடை விதித்து, கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு வெளியிட்டார். தடை விதித்து தற்போது ஆறு மாதங்களை எட்டியுள்ள நிலையில், இந்த தடை அமல்படுத்தப்பட்டது தொடர்பான விவரங்களை கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

உரிய நகல்களுடன்

இதில், பழைய 500 மற்றும் 1,000 நோட்டு ரத்துசெய்யும் முடிவுக்குமுன்பாகரிசர்வ் வங்கியில்நடந்தஆலோசனை விவரங்கள், பிரதமர் அலுவல கத்துடன்மேற்கொண்டகடித பரிமாற்றம் போன்ற விவரங் களை உரிய நகல்களுடன் அளிக்கவேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த விவரங்களை அளிக்க ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது. இதற்கு விளக்கம் அளித்து ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில், ரூபாய் நோட்டு தடை பின்னணியில் உள்ள கருத்து, தரவுகள், ஆய்வுகள், சர்வே போன்ற விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டுள்ளனர். இதுபோன்ற விவரங்கள் சிலவற்றை வெளி யிட இயலாது.

சட்டப்பிரிவு 10இன்படியும்

ரூபாய் நோட்டு தடை தொடர்பான பின்னணி தக வல்கள்போன்றவற்றைவெளி யிடுவது, நாட்டின் பொருளா தார நன்மைக்கு உகந்ததல்ல. இதுமட்டுமின்றி,அரசின்எதிர் கால நிதி மற்றும் பொருளாதார கொள்கைகளுக்கு தடையை ஏற்படுத்தும்.  தகவல் அறி யும் உரிமை சட்டம் பிரிவு 8(1)இன்படி நாட்டின் இறை யாண்மை, ஒருமைப்பாடு, அறிவியல்,பொருளாதாரநலன், வெளிநாட்டு உறவு ஆகியவற் றுக்கு பாதிக்கும், குற்றம் புரிய தூண்டும் தகவல்கள் போன்றவற்றை வெளியிட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல் இந்த சட்டப்பிரிவு 10இன்படியும் தகவல்களை வெளியிட இயலாது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner