எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கோவில் விழாக்களில் ஆபாச நடனத்திற்குத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

காகித உற்பத்திக் குறைவால் குறிப்பேடுகளின் விலை 30 சதவிகிதம் உயர்ந்தது.

தனியார் பள்ளிகளுக்குக் கட்டணம் நிர்ணயம் செய்யும் பணி தொடங்கியது.

தனியார் பள்ளிகளில் அரசு ஒதுக்கீட்டு சேர்க்கைக்கு மே 18 ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் சுகாதாரமற்ற 418 குடிநீர் கேன்கள் பறிமுதல்.

தலாக் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன.

எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம் இரும்புக் கழிவிலிருந்து மாற்று மணலைத் தயாரித்துள்ளது.

தமிழகத்தில் 11 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி.

பள்ளிகளுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்க உதவிப் பொறியாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்.

கல் குவாரிகளில் தேங்கியுள்ள தண்ணீரை எடுத்து சென்னை மக்களின் தாகம் தீர்க்க குடிநீர் வாரியம் முடிவு.

மேல்நிலைக் கல்வி பாடத் திட்டங்களை மாற்ற கல்வித் துறை பரிசீலனை.

இட ஒதுக்கீட்டால் இழிவு என்பது தாழ்வு எண்ணத்தின் வெளிப்பாடு - எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்.

ஆரணி அடுத்த வேலப்பாடியில் மழை வேண்டி இரு தவளைகளுக்குத் திருமணத்தை ஊர்மக்கள் நடத்தினார்களாம். (கொசுவுக்குக் கல்யாணம் செய்வதுதானே!).

சாலையின் தரத்தைக் கண்டறியும் தரக்கட்டுப்பாட்டு வாகனங்களை அறிமுகம் செய்தது தமிழக அரசு.

அரசு, தனியார் விழாக்களில் கேரளாவின் செண்டை மேளமே முன்னிலைப்படுத்தப்படுகிறது - தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் வருத்தம்!

சவுதி அரேபியாவில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு.

ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெட்ரோல் பங்குகள் இயங்கும்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner