எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மே 12 தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்வாக்காளர்களுக்குபணம் கொடுப்பதாக பரவலாக குற்றம் சாட் டப்படுகிறது.

இதை தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது குறித்து குற்றச்சாட்டு பதிவானால் வேட்பாளரை 6 ஆண்டுக்கு தகுதி நீக்கம் செய்யும் சட்டம் கொண்டு வர தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சட்ட திருத்தம் கொண்டு வர தேர்தல் ஆணையம் பரிந் துரை செய்து மத்திய சட்ட அமைச்சகத்துக்கு ஏற்கெனவே கடிதம் எழுதி இருந்தது.

இதற்கிடையே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே வேட்பாளரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வில் இருந்து 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றம் செய்யப் படுகின்றது.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner