எழுத்துரு அளவு Larger Font Smaller Font

** இன்று உலக அன்னையர் தினம்.

** தமிழ்நாட்டின் மொத்த மின்னுற்பத்தி 12,850 மெகாவாட்.

** பிரதமர் உள்பட முக்கிய பிரமுகர்கள் செய்த விமானப் பயணத்திற்கு செலவிடப்பட்ட தொகை 513 கோடி ரூபாய்.

** வேலை நாள்களில் ரேஷன் கடையை மூடினால் சம்பளமில்லை.

** காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி வேண்டாம் - வேளாண் வல்லுநர்கள் எச்சரிக்கை.

** 125 ரூபாயில் 200 சேனல்கள் வழங்க அரசு கேபிள் தொலைக்காட்சி முடிவு.

** கைதிகள் இல்லாததால் தொடர்ந்து நெதர்லாந்தில் சிறைகள் மூடப்பட்டுக் கொண்டே வருகின்றன.

** தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை எட்டாயிரம் ரூபாயாக உயர்த்தியது புதுவை அரசு.

** செவ்வாய்க்கோளில் விவசாயம் செய்ய நாசா திட்டம்.

** அரியானா மாநிலம், பரிதாபாத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட மதிய உணவில் பாம்பும் இருந்தது.

** சென்னைக்குப் புதிய காவல்துறை ஆணையர் நியமனம்.

** வேளாங்கண்ணி மாதாவை தரிசனம் செய்து திரும்பிய புது மாப்பிள்ளை உள்பட ஏழு பேர் சாலை விபத்தில் சாவு!

** 4 டன் எடையை சுமந்து செல்லும் புதிய வகை ராக்கெட் இஸ்ரோ தயாரிப்பு.

** லண்டனில் மணவிலக்கு கேட்ட தொழிலதிபர், மனைவிக்கு ரூ3,750 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு.

** பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நாளைமுதல் இணைய தளம் வழியாகப் பெறலாம்.

** சென்னையில் முன் அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் எடுக்க குடிநீர் வடிகால் வாரியம் தடை.

** விருத்தாசலம் அருகே 8 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கல் கருவிகள் கண்டெடுப்பு.

** சென்னையில் 16 ஆம் தேதிமுதல் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

** பிளஸ் 2 தேர்வில் கிரேடு முறை இல்லையாம் - அரசுத் தேர்வு இயக்ககம் திடீர் அறிவிப்பு.

** அறநிலையத் துறை ஊழியர்களே உண்டியல் காணிக்கை திருட்டு - வீடியோவில் காட்சிப் பதிவு.

** ராணுவ வீரர்களைக் காக்கும் நவீன உடைகளை இந்தியாவிற்கு வழங்க அமெரிக்க ஒப்புதல்.

** கணினி வழியில் கட்டட வரைபடம், மனைப்பிரிவிற்கு ஒப்புதல் பெற புதிய மென்பொருள் - தமிழக அரசு அறிமுகம்.

** மெட்ரோ ரயிலை சேதப்படுத்தினால் 10 ஆண்டு சிறைத்தண்டனை அபராதம் உண்டு.

** சென்னை - கன்னியாகுமரியிடையே கப்பல் போக்குவரத்துத் தொடங்க தமிழக அரசு ஆய்வு.

** எகிப்து பிரமீடுகளில் 17 மம்மிகள் கண்டுபிடிப்பு.

** ரயில் கட்டணம் 12 சதவிகிதம் வரை உயரலாம் - மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்.

** தமிழகத்தில் அறுவை சிகிச்சை மகப்பேறு 51 சதவிகிதமாக உயர்வு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner