எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மே 15 குஜராத் மாநிலத்தில் சபர்காந்தாமாவட்டத்திலுள்ளகாவல் நிலையத்தில்  பசுவதையின் பெயரால் 60 வயது முதியவரானகோடர்காமர்என்ப வரைகாவல்துறையினர்விசார ணைக்குஅழைத்துச் சென்றுள்ளனர். காவல்துறையினரின் விசாரணையின் போது துன்புறுத்தலால் கடுமையாக பாதிக்கப்பட்டு அவர் இறந்துவிட்டார்.

குஜராத் மாநிலத்தில் விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1954 கடந்த 2011ஆம் ஆண்டில் மேலும் கடுமையான தண்ட னைகளைஅளிக்கும்வண்ணம்திருத் தப்பட்டது. திருத்தப்பட்ட சட்டத்தின் படி, தற்போது குஜராத்தில் பசு வதை என்பது பிணையில் விட முடியாததும், ஆயுள் தண்டனைக்கும் உரிய குற்றமாக ஆக்கப்பட்டுள்ளது.

அதேபோல்,மாட்டிறைச்சியைவைத் திருக்கிறார்என்றாலேஅவர்கதி அதோகதிதான். ரூ. ஒரு லட்சத்திலி ருந்து ரூ.5 லட்சம் வரை தண்டம் விதிக்கப்படுவதுடன், ஏழு ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கப்படும். மேலும், பிணையில்விட முடியாத குற்றமாக அம்மாநிலத்தில் உள்ளது.

இன்றுவரையிலும், பசு வதையின் பெயரால் ஒருவர்மீது,  மாட்டிறைச்சி வைத்திருந்தார் என வழக்கு பதிவு செய்யப்பட்டால், அவருக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், தண்டத் தொகையாக ரூ.50 ஆயிரமும் விதிக்கப் பட்டு வருகின்ற நிலையே உள்ளது.

பழங்குடி வகுப்பைச் சேர்ந்த கோடர் காமர் (வயது 60) பசுவதைத் தடுப்பு என்கிற பெயரால் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்செல்வதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர். பின் னர் அவரை விடுவிக்க வேண்டும் என்றால், கையூட்டாக ரூ. 4 லட்சம் தரவேண்டும் என்று அவர் மகனிடம் கேட்டுள்ளனர். கையூட்டுத் தொகையை கொடுக்க இயலாத நிலையில் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த கோடர் காமர் காவல்நிலையத்திலேயே காவல்துறை யினரின் கொடுந்தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் கோடர் காமர் எனும் அம் முதியவர்காவல்துறையினரால்உள் ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன்பின்னர், கேத் பிரமா  அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அதன்பின் னர் அகமதாபாத் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல் லப்பட்ட நிலையில் அங்கேயே அவர் இறந்துள்ளார்.

காவல்துறையினரின் விசாரணைக்கு முதியவர் அழைத்துச் செல்லப்பட்டபோது உடல்நலமின்றி இருந்தால், காவல்துறையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட முடியுமா? கையூட்டு அளித்தால் விடுவிப்பதாகக் காவல்துறையினர் கூறியதாக அவர் மகன் கூறியுள்ள நிலையில், அத்தொகை கொடுக்க முடியாத நிலையில், காவல்துறையினரின் துன்புறுத்தலால் உடல்நிலை மோசமான அம்முதியவர் இறந்துள்ளார். ஆனால், குஜராத் மாநில காவல்துறையினர் அதை மறுக்கின்றனர். காவல் துறையினரின் துன்புறுத்தலால் அவர் உயிரிழக்கவில்லை என்றும் நோய்வாய்ப்பட்டே உயிரிழந்தார் என்றும் குஜராத் மாநில காவல்துறையினர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.

இந்நிலையில் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த கோடர் காமர் இறப்பு குறித்து குஜராத் மாநில அரசு 6.5.2017 அன்று நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner