எழுத்துரு அளவு Larger Font Smaller Font

** விடைத்தாள் திருத்தத்தில் அலட்சியம் காட்டும் பேராசிரியர்கள்மீது நடவடிக்கை எடுக்க உயர்கல்வித் துறை உத்தரவு.

** கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் - கல்வி ஆலோசகர் தகவல்.

** ரியல் எஸ்டேட் விதிகளை மீறினால் பத்திரப்பதிவு கிடையாது.

** தூங்கிக் கொண்டிருந்த பெண் காவலரை படம் எடுத்த ஆண் காவலர் பணியிடை நீக்கம்.

** பெங்களூருவில் சாப்பாட்டை தட்டிவிட்ட தாயை அடித்துக் கொன்ற மகள் கைது (மனோ வியாதியோ!).

** வரத்து அதிகரிப்பால் அரிசி மற்றும் பருப்பு விலை குறைந்துள்ளது.

** நாடு முழுவதும் ஆயிரம் ரயில் நிலையங்களில் மருந்து கடைகள் நிறுவ மத்திய அரசு திட்டம்.

** புராதன கட்டடங்களை பழைமை மாறாமல் புதுப்பிக்க பொதுப் பணித்துறை ஆய்வு.

** புழல் சிறையில் உள்ள கைதிக்கு கஞ்சா, அலைபேசி வழங்கிய சிறைக்காவலர் கைது.

** தற்போதைய குடியரசுத் தலைவரின் பதவி வரும் ஜூலையுடன் நிறைவு பெறுகிறது.

** கோவை விமான நிலையத்தில் ரூ.1.4 கோடி மதிப்புடைய வெளிநாட்டுப் பணம் பறிமுதல்.

** மண் பானைகள் விற்பனை அதிகரிப்பு.

** டில்லியில் சிவப்பு விளக்குப் பகுதியில் சிக்கிய சிறுமி மீட்பு.

** கணினி வழியில் கட்டட வரைபடம், மனைப்பிரிவிற்கு ஒப்புதல் பெற புதிய மென்பொருள் - தமிழக அரசு அறிமுகம்.

** மெட்ரோ ரயிலை சேதப்படுத்தினால் 10 ஆண்டு சிறைத்தண்டனை அபராதம் உண்டு.

** சென்னை - கன்னியாகுமரியிடையே கப்பல் போக்குவரத்துத் தொடங்க தமிழக அரசு ஆய்வு.

** எகிப்து பிரமீடுகளில் 17 மம்மிகள் கண்டுபிடிப்பு.

** ரயில் கட்டணம் 12 சதவிகிதம் வரை உயரலாம் - மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்.

** தமிழகத்தில் அறுவை சிகிச்சை மகப்பேறு 51 சதவிகிதமாக உயர்வு.

** துப்புரவுப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட 26 பேருக்கு கேடயம், சான்றிதழ் வழங்கி பூவிருந்தவல்லி நகராட்சி பெருமைப்படுத்தியது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner