எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பொய்யைத் தீனிப்போட்டு அவிழ்த்துவிட்டு அதில் சுகம் காணும் ‘‘சுகபோகிகள்’’ என்றால், அது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தாம். அவர்கள் நினைத்தால் சாணி சந்தனம் - சந்தனம் சாணி -  அதனை மற்றவர்கள் நம்பித் தான் தீரவேண்டும் என்ற அடா வடித்தனம்அவர்களுக்கே உரியது.

அதுபோன்றதே  ஆர்.எஸ்.எஸ். முகாம்களை காந்தியார் பார்வையிட்டார் - வானளாவப் புகழ்ந்தார் என்ற அண்டப் புளு கும் - ஆகாயப் புளுகுவும்.

உண்மையில் காந்தியார் என்னதான் சொன்னார்:

Pyarelal’s account is fairly detailed. His comments are pertinent. He was the Mahatma’s devoted Boswell and privy to his confidence: ‘It was common knowledge that the RSS . . . had been behind the bulk of the killings in the city [Delhi] as also in various other parts of India’ (p. 439). He records: ‘A member of Gandhiji’s party interjected that the RSS people had done a fine job of work at Wah refugee camp. They had shown discipline, courage and capacity for hard work. “But don’t forget,” answered Gandhiji,” even so had Hitler’s Nazis and the Fascists under Mussolini.
(Out Look opinion, 2008, July)

பிரிவினைக்குப்பிறகுடில்லி நகரில் பல முகாம்களில் பாகிஸ் தானினிருந்து வந்த இந்துக்கள் தங்கவைக்கப்பட்டனர். அப்படி தங்கியுள்ளவர்களுக்கு சில அமைப்புகள் சேவை செய்து வந்தன. அந்த அமைப்புகள் இஸ்லாமியர்களையும், இதர சிறுபான்மை மதத்தவர்களையும் கொலை செய்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சில இந்து அமைப்புகளின் செயல் களை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கண்டிக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.  அப் போதைய பஞ்சாப் (வாஹா) எல்லையில் உள்ள முகாம்களை காந்தியார் பார்வையிட்டார். அப்போது அங்கே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, அகதிகளாக வந்த இந்துக்களுக்கு உணவு உடைவழங்கிக்கொண்டுஇருந் தது.அப்போதுஆர்.எஸ்.எஸ் அமைப்பின்முக்கியதலைவர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் களின் செயல் மிகவும் உணர் வுப்பூர்வமாக இருக்கிறதல்லவா என்று பேசிக்கொண்டிருந்தார்.

இதையே காந்தியாரின் சீடர் ஒருவர் காந்தியிடம்  இவர்கள் தன்னலமில்லா  சேவைகளைச் செய்கிறார்கள் என்று கூறிய போது,

‘‘ஹிட்லரின் நாஜிப் படையும் முசோலினியின் பாசிசப் படையும் இதே போல்தான் சேவை செய் தன என்பதை மறந்துவிட வேண்டாம்‘’ என்று ஒருவரியில் ஆர்.எஸ்.எஸ். சேவைகளைப் பற்றி கூறிவிட்டார் காந்தியார்.

புரியும்படிச் சொன்னால் ஆர்.எஸ்.எஸின் கபடத் திரையை சாத்வீகமாகக் கிழித்தெறிந்து விட் டார் காந்தியார்.

போதுமா காந்தியாரின் ‘புகழ்மிக்க’ சான்றுப் பத்திரம்!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner