எழுத்துரு அளவு Larger Font Smaller Font

** சென்னைக்கு வந்த ரயிலில் 8 கிலோ தங்கம் பறிமுதல்.

** நேற்று நடைபெற்ற உ.பி. சட்டப்பேரவை வன்முறையில் ஆளுநர் மீது காகிதங்கள் வீசப்பட்டன.

** அய்.டி. துறையில் 2 லட்சம் பொறியாளர்கள் அடுத்த மூன்றாண்டுகளில் வேலை இழப்பர் - வல்லுநர்கள் கணிப்பு.

** போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசிடமிருந்து கிடைக்கவேண்டிய நிலுவைத் தொகை ரூ.6,640 கோடி.

** உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் விரைவில் தேர்தல் ஆணையம் ஆலோசனை.

** ஊழலில் ஈடுபட்ட அய்.பி.எஸ். அதிகாரிகள்மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை துவக்கியது.

** பேரிடர் விதிமுறைகளை சீரமைக்க மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை.

** தலாக் ரத்தானால் புதிய சட்டம் இயற்றப்படும் - மத்திய அரசு.

** மரபணு மாற்றிய கடுகை பயிரிடலாமா? ஆய்வு செய்கிறது நாடாளுமன்றம்.

** அரக்கோணத்தில் ஏற்பட்ட ரயில் பாதிப்பு காரணமாக சென்னைக்கு வரவேண்டிய ரயில்கள் அனைத்தும் காலதாமதம்.

** வேதாரண்யத்தில் விரைவில் காஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைக்கப்படும் - தமிழக அரசு.

** திருப்பூரில் தந்தை மற்றும் மகளை கொடூரமாகக் கொலை செய்த மூவருக்கு ஆயுள் தண்டனை, இருவருக்குத் தூக்கு - திருப்பூர் மகளிர் நீதிமன்றம்.

** ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஜூன் மாதம் முதல் தமிழக அரசு தடை விதிப்பு.

** அஞ்சல் துறையில் பணியாற்ற ஜூன் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

** சாலிக்கிராமத்தில் மழை நீர் வடிகாலை ஆக்கிரமித்து விநாயகர் கோவில் - உடனே அகற்றுக மாநகராட்சி நோட்டீஸ்

** மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க வலியுறுத்தி நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை குடிகாரர்கள் முற்றுகையிட்டனராம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner