எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

லக்னோ, மே 17 கடந்த ஆண்டில் கரும்பு விவசாயிகளுக்கு பெருமளவில் லாபத்தை ஈட்டிக் கொடுத்தது கரும்பு பயிர். ஆனால், கடந்த ஆண்டு ஆலைகளுக்கு அளிக்கப்பட்ட கரும்புகளுக்கு உரிய  தொகைக்காக காத்திருக்கும் விவசாயிகள் இந்த ஆண்டிலோ, தற்கொலை செய்து கொண்டு இறக்க வேண்டிய கட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பஜாஜ் குழுமத்தின் சார்பில் ரூ.2,285 கோடி

இந்தியன் சர்க்கரை ஆலைகள் சங்கம் அளித்துள்ள தகவலின்படி, உத் தரப்பிரதேச மாநிலத்தில் ரூ.4,135 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைத் தொகையாக உள்ளது. பஜாஜ் குழுமத்தின் சார்பில் ரூ.2,285 கோடி விவசாயிகளுக்கு வழங்கப் படவேண்டியதாக உள்ளது. மோடி குழு மத்தின் சார்பில் கரும்பு விவசாயிகளுக்கு அளிக்கப்பட் வேண்டிய நிலுவைத் தொகை ரூ.462 கோடியாக உள்ளது.

விரக்தி அடைந்துள்ள

விவசாயிகள்

இதுபோல் நிலுவையில் வைக்கப் பட்டுள்ள கரும்புக்கான தொகை அளிக் கப்படாததால் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை  கடுமையாக பாதித் துள்ளது. நாட்டின் பிரதமர் மோடி மற்றும் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் சாமியார் ஆதித்யநாத்திடம் விரக்தி அடைந்துள்ள விவசாயிகள்  தற்கொலை செய்துகொள்ள அனுமதி வழங்குமாறு கோரியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பவல் கிராமத்தைச் சேர்ந்த தீர்சிங் என்பவருக்கு தாயும், திருமணமாகாத இரு சகோதரர்களும் உள்ளனர். அவருக்கு ஏற்பட்ட இழப்பையடுத்து மோடிக்கும், ஆதித்யநாத்துக்கும் கடிதத்தை எழுதி யுள்ளார். அவரைப்போல், மேலும் 18 விவசாயிகள் தற்கொலைக்கு அனுமதி கோரி கடிதத்தை எழுதியுள்ளனர்.

அவல நிலையில்

உத்தரப்பிரதேச மாநிலம்

நாட்டின் சர்க்கரைத் தேவைக்கு உத்தரப்பிரதேசமாநிலம்கரும்புஉற் பத்தியில்30விழுக்காட்டளவில்உற்பத்தி செய்து வருகிறது. அம்மாநிலத்தின் கரும்பு உற்பத்தியில் 50 முதல் 60 விழுக்காட்டளவில் பணம் செலுத்தப் படாமல் நிலுவையில் உள்ள அவல நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner