எழுத்துரு அளவு Larger Font Smaller Font

** கோலாலம்பூர் விமான நிலையத்தில் கதிர் வீச்சு பாய்ச்சப்பட்ட மனதைக் கவரும் ஆமைகள் பறிமுதல்.

** ராஜஸ்தான் மாநிலம், மண்டல் நகரில் ஒசாமா பின்லேடனுக்கு ஆதார் அட்டை தயாரித்த இளைஞர் சதாம் ஹூசைன் மன்சூரி (25) கைது.

** இன்னும் மூன்றாண்டுகளில் மலேரியா நோய் ஒழிக்கப்படும் - மத்திய அரசு நம்பிக்கை.

** எவரெஸ்ட் சிகரத்தை எட்டு முறை ஏறி சாதனை செய்தார் நேபாளப் பெண் லக்பா ஷெர்பா (44).

** நேற்று முன்தினம் தாம்பரத்தில் மதுபானக் கடையை அகற்றாததால், கடைக்குத் தீ வைத்தனர் பொதுமக்கள்.

** சென்னை - அம்பத்தூரில் நேற்று முன்தினம் குப்பைகளைத் தரம் பிரித்து எடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

** மே 20 ஆம் தேதி திருத்தணியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

** நாடு முழுவதும் தனியார் பள்ளி கட்டணங்களை முறைப்படுத்த மத்திய அரசு ஆலோசனை.

** 50 சதவிகித மக்கள் இயற்கை சீற்ற பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் வசிக்கின்றனர் - அமைச்சர் ராஜ்நாத் சிங்.

** ஆவின் விற்பனையகங்களுக்கு போன் செய்தால், ஆவின் பொருட்கள் வீடு தேடிவரும் - புதிய திட்டம் ஜூனில் அறிமுகம்.

** தலைக்கவசம் அணியாவிட்டால் உ.பி.யில் இருசக்கர வாகனங்களுக்குப் பெட்ரோல் இல்லை.

** இந்த ஆண்டு தங்கம் இறக்குமதி மும்மடங்கு அதிகரிப்பு.

** தமிழகத்தில் 11 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner