எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

திருப்பதிகோவிலின்கணி னிகள்அனைத்தும் ‘ரன்சொன் வார்’என்றகணினிவைர சால் பெருமளவில் பாதிக்கப் பட்டுஇருக்கிறதாம்.இதனால், ஏற்கெனவே பதிவு செய்யப் பட்டிருந்த தரிசனப் பட்டியல் அனைத்தும் அழிந்துவிட்டதாம்! ஆகவே, மீண்டும் புதிதாகக் கட்டணம்கட்டிநேரடியாகசீட்டு களைப் பெற்று தரிசனம் செய்ய வேண்டும் என்று தேவஸ்தானம் தரப்பில் வேண்டுகோள் விடுக் கப்பட்டுள்ளது.

 

வைரசால்தரிசனப்பட்டி யல்அழிந்துவிட்டதுஎன்பதற் காக ஏற்கெனவே பணம் செலுத்தியவர்கள் நட்டப்பட வேண்டுமா?மறுபடியும்பணம் கட்டித்தான் அந்த ஏழுமலை யானைத் தரிசிக்க வேண்டுமா?

 

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எவ்வளவு உள் குத்துகள், பேரங்கள் நடக்குமோ! எத்தனைக் கோடி பணம் கைமாறுமோ யார் கண்டது?

 

இது ஒருபுறம் இருந்து தொலையட்டும்; ‘தீராத வினை யெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தன்!’ என்று இன்னும் எத்தனை நாளைக்குச் சொல்லி ஏமாற்ற முடியும்? எத்தனை நாளைக்குக் குழு (கோரஸ்) பாட்டும்தான் பாட முடியும்?

 

ஒரு கம்ப்யூட்டர் வைரசையே தடுக்க முடியாதவன் எந்த நோயைத் தடுக்கப் போகிறான்? எந்த வறுமையை விரட்டப் போகிறான்? எந்த ஒரு பக்தனை வாழ வைக்கப் போகிறான்?

 

எந்த வறட்சியைப் போக்கப் போகிறான்? எந்த வெள்ளத்தைத் தடுக்கப் போகிறான்? எந்தப் புயலை நிறுத்தப் போகிறான்?

 

மக்கள் கலையரசி மனோரமா திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்துவிட்டு காரில் திரும்பிய போது வாகனம் மரத்தில் மோதியது நினைவில்லையா? அதற்குப் பிறகு அவர் உடல் நிலை தேறி பழைய நிலைக்கு வர முடியாமலேயே போய்விட்டதே!

 

வெங்கடேஸ்வரன் குடியிருக்கும் திருப்பதியில்தான் விபச்சார விடுதிகள் அதிகம் என்றும், ‘எய்ட்ஸ்’ நோயாளிகள் அதிகம் என்றும் தகவல்கள் கூறுகின்றனவே!

 

வெகுதூரம் போக வேண் டாம்-ஏழுமலையான்கோவில் நகைகளும் திருடு போகின்ற னவே!

 

மன்னன் கிருஷ்ண தேவ ராயன் கொடுத்த வைர நெக்லஸ், மரகதம் பொறிக்கப்பட்ட வைரப் பதக்கம் காணவில்லையே! ஏழுமலையான் உருவம் பதித்த டாலர் விற்பனை மோசடி புகழ் ஆசாமி (‘டாலர் சேஷாத்திரி’ என்ற பெருங்கீர்த்தி பெயர் வேறு) இன்னும் ஜம்பமாக ராஜநடைப் போட்டுத் திரிகிறாரே!

 

9000கோடிரூபாய்ஏப்பம் விட்டிருக்கும் விஜய் மல்லையா இதே ஏழுமலையான் கோவி லுக்குத் தங்கத்தினால் ஆன கதவைச் செய்து கொடுத்தார் என்றால், பக்தியின் - கடவுள் சக்தியின் யோக்கியதைக்கு வேறு என்ன ‘ருசு’ வேண்டும்?

 

ஏழுமலையானுக்குச் சக்தியா?

 

வைரசுக்குச் சக்தியா?

 

சிந்திப்பீர்!

 

- மயிலாடன்

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner