பாட்னா, மே 18 வருமான வரித் துறை நடத்தும் சோதனைகளால் அச்சப்பட மாட்டேன் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.
லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கூறப்பட்டுள்ள ரூ.1,000 கோடி சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக டில்லி உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரித் துறையினர் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
இந்நிலையில், இது தொடர் பாக சுட்டுரையில் (டுவிட்டர்) லாலு கூறியதாவது:
மத்திய அரசுக்கு எதிரான எனது எதிர்ப்புக் குரலை ஒடுக்க பாஜக முயற்சிக்கிறது.
ஒரு லாலு பிரசாத்தை அடக்க அவர்கள் முயற்சித்தால், நாடு முழுவதும் ஒரு கோடி லாலு பிரசாத்துகள் உருவாகி பாஜகவை எதிர்ப்பார்கள். வரு மான வரித் துறையை ஏவி விட்டு மத்திய அரசு மேற்கொள்ளும் மிரட்டல்களுக்கு நான் அஞ்சமாட்டேன்.
பிகாரில் மகா கூட்டணியை உடைத்து அங்கு ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பது பாஜகவின் நோக்கமாக உள் ளது. ஆனால், உண்மையில் மகாகூட்டணிமேலும்வலு வாகிவருகிறது.ஒத்தகருத்து டைய பல கட்சிகள் எங்களு டன் கைகோக்க தயாராகி வரு கின்றன. எத்தனை விசாரணை அமைப்புகளை பாஜக என் மீது ஏவினாலும் மனம் தளர மாட்டேன்.
ஆர்எஸ்எஸ், பாஜகவின் ஏமாற்று வேலைகளையும், பொய் பிரச்சாரங்களையும் நான் முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்பது அவர்களுக்குத் தெரியும். எனவேதான் எனக்கு நெருக்கடி அளிக்கிறார்கள். எனது இறுதி மூச்சு இருக்கும் வரை பாஜக போன்ற தீய சக்திகளுக்கு எதிராகப் போராடுவேன் என்று லாலு பிரசாத் கூறியுள்ளார்.