எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தவறான தகவல்! (குங்குமம்)
‘‘1925 இல் சென்னை மாகாண காங்கிரஸ் மாநாடு காஞ்சிபுரத்தில் நடந்தது. அதில், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு கேட்டு தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென பெரியார் ஈ.வெ.ரா. கோரிக்கை வைத்தார். ஆனால், காங்கிரஸ் தலைவராக இருந்த சீனுவாச அய்யங்கார் பெரியாரின் கோரிக்கையை ஏற்க மறுத்தார். இதனால் தேவையற்ற ஜாதி சச்சரவுகள் உருவாகும் என்று அவர் கூறினார். இதையடுத்து காங்கிரஸ்கட்சியிலிருந்துவிலகு வதாகஅறிவித்துவிட்டு,மாநாட் டிலிருந்து பெரியார் வெளியேறி னார். பிறகுதான் நீதிக்கட்சியில் இணைந்து, பிற்காலத்தில் அதற் குத் திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டினார்!’’

- இப்படி ஒரு செய்தி ‘குங் குமம்‘ வார இதழில் (21.4.2017, பக்கம் 107) வெளிவந்துள்ளது.

இதற்குமுன் ‘‘ஈரோடு நகராட் சிக்குப் பெரியார் தலைவராக இருந்தபோது இந்தியாவிலேயே முதன்முதலாகக் கொண்டு வந்த குடிநீர்த் திட்டத்தைத் தொடங்கி வைத்தவர்  ராஜாஜி’’ என்று தவறான தகவலை ‘குமுதம்‘ (5.4.2017) வெளியிட்டது. அந்த ராஜகோபாலாச்சாரி அய்.சி.எஸ். வேறு - ராஜாஜி வேறு என்பதை விளக்கியது ‘விடுதலை’ (11.5.2017).

இப்பொழுதும் அந்த முறை யில்தான் பெட்டிச் செய்தி ஒன்றைத் தப்பும் தவறுமாக வெளியிட்டுள்ளது ‘குங்குமம்!’

உண்மைவரலாறுதான் என்ன?

தந்தை பெரியார் 1919 இல், தான் வகித்து வந்த 29 பதவிகளையும் தூக்கி எறிந்துவிட்டு காங்கிரசில் சேர்ந்தார்.

1920 இல் நடந்த திருநெல் வேலி காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புவாரி தீர்மானத்தைக் கொண்டுசென்றுஆறுவாக்கு கள்அதிகம்பெற்றார்.மாநாட் டின் தலைவர் எஸ்.சீனிவாச அய்யங்கார், ‘இது பொது நலத்துக்குக் கேடு’ என்று தீர் மானத்தை அனுமதிக்காமல் மறுத்துவிட்டார். 1921 இல் தஞ்சாவூர் மாகாண மாநாட்டில் இதே தீர்மானத்தை தந்தை பெரியார் முன்மொழிந்தார். அது சமயம் ராஜாஜி அவர்கள் ‘‘கொள்கையாக வைத்துக் கொள்வோம்; தீர் மான ரூபமாக வேண்டாம்‘’ என்று தடுத்துவிட்டார். 1922 இல் திருப்பூர் மாநாட்டிலும் பெரியார் அத்தீர்மானத்தைக் கொண்டு சென்றார். அப்போது நடந்த விவாதத்தில்தான் தந்தை பெரியார்சீற்றங்கொண்டுமனு தர்மசாஸ்திரத்தையும்,இரா மாயணத்தையும் கொளுத்த வேண்டும் என்று கர்ஜித்தார். கலவரம் ஏற்பட்டு சேலம் விஜய ராகவாச்சாரியார் அடங்கினார். 1923 இல் சேலம் மாநாட்டிலும் பெரியார் தொடர்ந்தார். கலவரம் ஆகும் நிலையில், ஜார்ஜ் ஜோசப் பும், டாக்டர் வரதராஜூலு நாயுடுவும் தடுத்து விட்டனர்.

1924ஆம்ஆண்டுதிருவண் ணாமலையில் பெரியார் தலை மையில் நடந்த மாநாட்டில் இத்தீர்மானம் வந்தபோது சென் னையிலிருந்து ஆட்களைத் திரட்டிக் கொண்டு வந்து சீனி வாசய்யங்கார் தடுத்து விட்டார்.

1925 ஆம் ஆண்டில் தந்தை பெரியாரின் நண்பர் திரு.வி.க. தலைமையில் காஞ்சிபுரத்தில் நடந்த மாநாட்டிலும் பெரியார்விடவில்லை.தலைவர் என்ற முறையில் திரு.வி.க.நிராகரித்ததால்,வெகுண் டெழுந்த பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார் - (நீதிக்கட்சி யில் சேர்ந்தார் என்ற ‘குங்குமம்‘ தகவலும் தவறு).

வரலாறு இவ்வாறு இருக்க, கண்ட மாதிரி ஏடுகள், இதழ்கள் வெளியிடுவது சரியானதுதானா?
- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner