எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொடுமைகளைத் தாங்க முடியாமல்
கிராமம் கிராமமாக தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் மத மாற்றம்!
அம்பேத்கர் பிறந்த நாள் விழா மேடைகள் தகர்ப்பு

லக்னோ, மே 20 உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோவில் பூசாரி ஆதித்தியநாத் தலைமையில் ஆட்சி அமைந்ததுமுதல் பச்சையான இந்து மத வருணாசிரம ஆட்சி தொடங்கப்பட்டு விட்டது.தாழ்த்தப்பட்டோர்,பிற்படுத் தப்பட்டோர்மீதுதாக்குதல்தொடரப் பட்ட நிலையில், கிராமம் கிராமமாக தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட் டோரும் இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு ஜாதியற்ற இஸ்லாம், புத்த மார்க்கம் தழுவுகின்றனர்.

உத்தரப்பிரதேசம் சகரன்பூர் என்ற மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடக்கூடாது என்று ‘மகாரனா பிரதாப் சேனா’ என்ற அமைப்பு மிரட்டல் விடுத்திருந்தது. காவல்துறையும் பிரதாப் சேனாவிற்கு ஆதரவாக இருந்தது. இந்த நிலையில் அம்பேத்கர் விழா கொண் டாடப்படவிருந்த மேடைகள் மற்றும் அலங்கார வளைவுகள் அனைத்தும் சேதப் படுத்தப்பட்டன; 50--க்கும் மேற்பட்ட தலித் துகளின் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன.

இந்த நிலையில் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் பாதிக்கப்பட்ட தலித்துகளில் 80---க்கும் மேற்பட்டோர் மீது கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இப்பிரச்சினை தேசிய தாழ்த்தப்பட்டோர் நலஆணையத்தின்கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே சகரன்பூர் குமார் வட்டத்தைச் சேர்ந்த மூன்று கிராமத் திற்கும் மேற்பட்ட  மக்கள் தாங்கள் இனி ‘இந்துக்கள் அல்ல’ என்று அறிவித்துள்ளனர். இந்து மதத்தை விட்டும் வெளியேறியுள்ளனர்.

ஆதித்தியநாத் ஆட்சிக்கு வந்த பிறகு தாழ்த்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது உயர்ஜாதியினரின் அடாவடி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்து மதம் மாறி வருகின்றனர்.    
முடி திருத்த மறுப்பு

மீரட் மற்றும் கோரக்பூர் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது கொடூரத் தாக்குதல்கள், அடக்குமுறைகள் சமீபகாலமாக அதிகரித்துவிட்டன. சில நாள்களுக்கு முன்பு மிர்பூர் பகுதியில் தலித் துகளுக்கு முடிவெட்டக் கூடாது என்ற உயர்ஜாதியினரின் எச்சரிக்கையை அடுத்து அப்பகுதிநாவிதர்கள்தலித்துகளுக்குமுடி வெட்டவும், தாடிமழிப்பதையும் தவிர்த் தனர். இதனால் அப்பகுதி தலித்துகள் இந்துமதத்தை விட்டு வெளியேறி அடுத்த மாதம் நடைபெறும் ரம்ஜான் நோன்பின் போது இஸ்லாமிய மதத்தைத் தழுவுவதாக அறிக்கை விடுத்து, தங்கள் வீட்டிலிருந்த இந்து சமய கடவுள் சிலைகள், படங்கள் போன்றவற்றை குப்பையில் வீசியும், ஆற்றில் வீசியும் தங்கள் விரோதத்தைப் பட் டாங்கமாக வெளிப்படுத்தினர்.

அண்ணல் அம்பேத்கர்
விழாவுக்குத் தடை

இந்நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட முயன்ற தலித்துக்களை தாக்கியது தொடர்பாக குற்றவாளிகளைக் கைது செய்யாமல் பாதிக் கப்பட்ட தலித்துக்களைக் கைது செய்தது தொடர்பாக தொடர்ந்து பீம் ஆர்மி என்ற அமைப்பு சகரன்பூர் காந்தி மைதானத்தில் அறப்போராட்டம்நடத்திவருகிறது,இவர் களுக்கு ஆதரவாக சிறுபான்மை அமைப்பு களும் இணைந்துள்ளன.

இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக கிராமம் கிராமாக இந்து மத்ததை விட்டு வெளியேற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில் 12 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தாங்கள் இந்துக்கள் இல்லை என்று அறிவித்துள்ளனர். 3 கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பவுத்த மதத்தைத் தழுவி யுள்ளனர்.

180 குடும்பங்கள் புத்த மார்க்கம்

இந்து மதத்தை விட்டு வெளியேறி, கடவுளின் படங்களை வீசப் புறப்படும் இளைஞர்கள்

இதன் தொடர்ச்சியாக உக்த் மற்றும் கதேட் கிராமத்தைச்சேர்ந்த 180 குடும்பங்கள் இந்து மதத்தில் இருந்து விலகி பவுத்த மத்ததை தழுவியுள்ளனர். புதனன்று (மே 17) அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் வீடுகளில் இருந்த இந்து கடவுளர்களின் சிலைகள் மற்றும் படங்களை வீட்டிலி ருந்து வெளியே வீசிவிட்டனர். இவர்கள் அனைவரும் தாங்கள் பவுத்த மதத்தைத் தழுவியதாக அறிவித்தனர்.

மகாரனா பிரதாப் சேனா என்ற உயர் ஜாதி அமைப்பு ஏப்ரல் 14 ஆம் தேதி மகாரானா பிரதாப் வீர மரணம் அடைந்ததாகவும், அந்நாளை துக்க நாளாக கொண்டாடவேண்டும் என்றும் அறிவித்து வருகிறது. ஆனால், அன்று அம்பேத்கர் பிறந்த நாள் ஆகையால் வட மாநிலங்களில் அம்பேத்கர் பிறந்த நாளை ஒடுக்கப்பட்ட மற்றும் பட்டியலின மக்கள் வெகு சிறப் பாகக் கொண்டாடி வருகின்றனர்.

இதனால், உ.பி. மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ராஜ்புத் என்ற உயர்ஜாதியினருக்கும், பட்டியலின மக்களுக்குமிடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவதுண்டு. இந்த ஆண்டு ஆதித்தி யநாத் என்ற சாமியார் முதல்வர் பதவிக்கு வந்தது முதல் வருணாசிரம விதிகள் மாநிலம் முழுவதும் பின்பற்றப்படுகின்றன.

வருணாசிரமப்படி நடக்கவேண்டுமாம்

இவ்விவகாரம் தொடர்பாக பிரதாப் சேனா அமைப்பினர்கூறும்போது,‘‘இத்தனை ஆண்டு காலமாக இந்து விரோத ஆட்சி நடைபெற்றது. ஆகவே தான் இதுமதத்தின் உயரிய கொள்கை கள் பின்பற்றப்படவில்லை. ஆனால் தற் போது உண்மையான இந்து மத ஆட்சி நடை பெறுகிறது. இங்கே அவரவருக்கு என்று மதப் பிரகாரம் விதிக்கப்பட்ட கட்டளைகளின்படி நடக்கவேண்டும்; அப்படி நடந்தால் தான் சமூகத்தில் அமைதி நிலவும், ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இந்துமதஆட்சிநடைபெற்றது.ஆகையால்தான் நாடு செல்வச்செழிப்பிலும், ஆன்மீக சிந்தனை யிலும் சிறந்து விளங்கியது. ஆகவே, மீண்டும் இந்தியாவின் பழையபெருமையை மீட்கவேண்டும் என்பதே எங்கள் அமைப்பின் கொள்கை’’ என்று கூறினர்.

இதுகுறித்து பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் கூறும் போது,

‘‘ஆதித்தியநாத் ஆட்சிக்கு வந்தது முதல் உயர்ஜாதியினரின்கொடுமைஅதிகரித்துவருகிறது. வெளியிடங்களுக்கு எங்களை செல்லவிடுவதில்லை, தோட்டவேலைகளுக்குஅழைப்பதில்லை,பள்ளிக் கூடம்செல்லும்மாணவர்களைமிரட்டிவிரட்டு கின்றனர். நூலகங்களில் எங்களை நுழைய விடுவதில்லை; மகாரானா பிரதாப் என்பவர் என்ன வரலாற்றில் இடம் பிடித்தவரா? இவர்களாக ஒரு கதையை உருவாக்கி அதன் நாயகனாக மகாரானா பிரதாப்பை முன்னிறுத்தி அவர் ஏப்ரல் 14 ஆம் தேதி மரணமடைந்தார் என்று கதைவிட்டு அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தைச் சீர்குலைக்கின்றனர்.

காவல்துறையின் ஒரு சார்பு நிலை

காவல்துறை மற்றும் அதிகார மட்டத்தில் உள்ள உயர்ஜாதியினரும் அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர். 50-க்கும் மேற்பட்ட பட்டிய லின மக்கள் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. எங்கள் வீடுகளை எரித்தவர்களை கைதுசெய்யாமல் பீம் ஆர்மி அமைப்பைச் சேர்ந்தவர்கள்மீது கடுமை யான பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கிராம் கிராமமாக
இந்து மதத்துக்கு முழுக்கு

உயர்ஜாதியினரின் கொடுமைகள் நாங்கள் இந்துவாக இருக்கும் வரை தொடரும்; ஆகவே, எங்கள் தலைமுறையினர் இனி இந்துவாக பிறக்கமாட்டார்கள், அவர்கள்மீது ஜாதி என்ற அடையாளம் அழித்தொழிக்கும் விதமாக நாங்கள் இந்துமத்தை விட்டு பவுத்தம், மற்றும் இஸ்லாம் மதங்களை தழுவ முடிவெடுத்து கிராமம் கிராமமாக மதம் மாறி வருகிறோம்' என்று கூறினார்.  

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner