எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ரூபாய் நோட்டு செல்லாததாக்கப்பட்டதைத் தொடர்ந்து ரொக்கமில்லாப் பரிவர்த்தனைகள் அதிகரித்தன என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவு உண்மை இப்போது மக்கள் மீண்டும் ரொக்கப் பரிவர்த்தனைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது. கடந்த ஏப்ரல் மாதப் புள்ளிவிவரங்களின்படி, பண அட்டைப் பரிவர்த்தனை, மொபைல் வங்கி சேவை உள்ளிட்டவை எண்ணிக்கை அளவிலும், பண மதிப்பு அளவிலும் கணிசமாகக் குறைந்து விட்டிருப்பதாகத் தெரிகிறது.
ரொக்கத் தட்டுப்பாடு இருந்தபோது வேறு வழியில்லாமல் பண அட்டைகள் மூலமாகவும், பணப் பரிமாற்ற செயலிகள் மூலமாகவும் வர்த்தகப் பரிவர்த்தனைகளை மேற்கொண்ட மக்கள், இப்போது தாராளமாகப் பணப்புழக்கம் ஏற்பட்டுவிட்ட நிலையில் மறுபடியும் ரொக்கப் பரிவர்த்தனைக்கே திரும்பி விட்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம்.
‘தினமணி’ தலையங்கம், 19.5.2017

சமஸ் கட்டுரை - ஒரு சந்தேகம்

‘தமிழ் இந்து’ நாளேட்டில் நேற்று (19.5.2017) ஒரு நீண்ட கட்டுரையை தோழர் சமஸ் எழுதியுள்ளார் (பக்கம் 9).
மார்க்ஸிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை பெரியாரும், அடிகளாரும் பங்கேற்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் என்ற ஒரு வரி அக்கட்டுரையில் காணப்படுகிறது.
எஸ்.வி.ராஜதுரை அவர்கள் பங்கேற்ற அந்த பல நிகழ்ச்சிகள் என்னென்ன? எப்பொழுது? எங்கே? என்ற விவரத்தை அருள்கூர்ந்து வெளியிட்டால் நமக்கு மிக உபயோகமாக இருக்கும்.
வெளியிடுவாரா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner