எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தூத்துக்குடி,மே21
பணமதிப்பு நீக்க அறிவிப்புதான் இந்தியா வின் மிகப்பெரிய ஊழல் என்றார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

தூத்துக்குடி சிதம்பர நகர் திடலில் நேற்று (20.5.2017) மாலை காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலந்துகொண்ட  ப.சிதம்பரம் பேசியதாவது:

இந்தியாவில் ஜனநாயக முறைப்படி பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. அதன் தலைமை பொறுப்பை நரேந்திர மோடி ஏற்றுள்ளார். இதனை மறுக்கவில்லை. ஆனால், பிரதமர் சொன்னதை செய்யவில்லை.தேர்தல்நேரத் தில்அவர்சொன்னவாக் குறுதிகள் எதுவும் நிறைவேற் றப்படவில்லை. தமிழகத்தில் மட்டும்பாரதீயஜனதாகட்சி யால் வெற்றி பெற முடிய வில்லை. அதற்கு காரணம் தமிழக மக்கள் முட்டாள்கள் இல்லை என்பதே.

திடீரென்று ஒரு நாள் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனால் கருப்பு பணம், ஊழல், கள்ள நோட்டுகள் ஒழிக்கப்படும் என்று கூறினார். ஆனால் இந்த அறிவிப்பால் ஏழை மக்கள் மட்டுமே பெரிதும் பாதிக்கப்பட்டனர். கருப்பு பணம் ஒழியவில்லை.

வருமான வரி சோதனையில் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த 3 ஆண்டுகளில் ஊழல் ஒழியவில்லை. இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ஊழல், பிரதமர் அறிவித்த பண மதிப்பு நீக்கம்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

செய்தியும்
சிந்தனையும்

‘வக்காலத்து'

செய்தி: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தி.மு.க. இதுவரை கருநாட காவைக் கேட்கவில்லை.
- பொன்.ராதாகிருஷ்ணன்

சிந்தனை: ஓ, அதனால்தான் தண் ணீர் விடவில்லையோ - இதைவிட கருநாடகத்துக்கு யாரால்தான் வக் காலத்து வாங்க முடியும்?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner