எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, மே 22
நாடு முழுவதும் பள்ளிகளில் பகவத் கீதையை கட்டாயமாக கற்பிக்க கோரும் தனிநபர் மசோதாவை பாரதீய ஜனதா எம்.பி. ரமேஷ் பிதுரி கடந்த மார்ச் மாதம் நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதம் நடத்த குடியரசுத் தலைவர் பரிந்துரை செய்து இருப்பதாக நாடாளுமன்ற செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த மசோதாவில், பகவத் கீதையின்  சிந்தனைகளும், போதனைகளும் இளைய தலைமுறையை சிறந்த குடிமக்களாக ஆக்கும். எல்லா வயதினருக்கும் பொருத்தமானது. இதை கல்வி நிறுவனங்கள் புறக்கணித்து இருப்பது கண்டிக்கத்தக்கது.

எனவே, நீதி போதனை கல்வியாக கீதையை கற்பிக்க வேண் டும். இதை பின்பற்றாத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும். அதே சமயத்தில், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இதில் விலக்கு அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளதாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner