எழுத்துரு அளவு Larger Font Smaller Font

.நெடுவாசல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை மகளிர் சிறையில் நிர்வாணமாக்கி சோதனை - பாதிக்கப்பட்ட மாணவி புகார்.

இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை சிதைக்க மத்திய அரசு முயற்சி- முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன்.

நடிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் புகையிலையை பயன்படுத்தக் கூடாது என்று ரசிகர்கள், தொண்டர்களுக்கு உத்தரவிடுங்கள் - உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்.

18 வயதுக்குட்பட்ட பெண்கள் மகப்பேறுக்கு அனுமதிக்கப்பட்டால், குழந்தைகள் நலக்குழுவிற்கு மருத்துவமனைகள் தகவல் தெரிவிக்கவேண்டும் - சென்னை மாவட்ட ஆட்சியர்.

இடைத்தேர்தலில் ராசியான தேதியை அறிவிக்க தேர்தல் அதிகாரிக்கு லஞ்சம் தர முயன்றார் தினகரன் - டில்லி காவல்துறையினர் குற்றச்சாட்டு.

பள்ளி மாணவிகளுக்கு குறைந்த விலையில் நாப்கின் வழங்க கேரள அரசு புதிய திட்டம்.

பணியில் வீர மரணம் அடையும் துணை ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ரூ.ஒரு கோடி வழங்கப்படும் - அமைச்சர் ராஜ்நாத் சிங்.

தேர்தலில் இணைய வழி வாக்குப் பதிவிற்கு சாத்தியமில்லை - தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஹைதி.

தமிழகத்தில் விவசாயத்திற்கு இலவச மின்னிணைப்புக் கோரி காத்திருக்கும் விவசாயிகள் - 4,28,767 பேர்.

பஞ்சாபில் ஓராண்டு தொடர் விடுப்பு எடுத்தால், அரசுப் பணி பறிக்கப்படும்.

மின்விளக்கு வசதியே இல்லாத வீடுகளில் வசித்த சேலம் மாவட்டம், நீதிபுரத்தைச் சேர்ந்த தேன்மொழி (484), சிறீநிதி (482), கோமதி (479) ஆகியோர் பத்தாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை.

என் பெயரில் நற்பணி மன்றம் வேண்டாம் - முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம்.

சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட 20 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது.

மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை.

மாநகராட்சிப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் விரைவில் தொடக்கம் - மாநகராட்சி கல்வித்துறை துணை ஆணையர் தகவல்.

இன்று (மே 22) பன்னாட்டுப் பல்லுயிர் பெருக்க நாள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner