எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மொராதாபாத், மே 23 பாஜ எம்பி என்னை செருப்பால் அடித்தார் என அரசு அதிகாரி ஒருவர் பிரதமர் மோடிக்கு கடி தம் எழுதியுள்ளது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள மொராதாபாத் தொகுதி பாஜ எம்பியாக இருப்பவர் தாகுர் சர்வேஷ். இங்கு அலிம்கோ என்ற அரசு நிறுவனம்  ஒன்றின் பொது மேலாளராக பணியாற்றி வருபவர் அசோக். இவரது உதவியாளர் அருண் மிஸ்ரா. கான்பூரை மய்யமாக வைத்து இயங்கி வரும் இந்த நிறுவ னத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ள முதல்வர் யோகி  ஆதித்யநாத் வந்திருந்தார். அங்கு நடைபெற்ற விழாவில் மாற்று திறனாளிகளுக்கு முதல் வர் 3 சக்கர சைக்கிள் உள்ளிட்ட உபகரணங்களை  வழங்கினார்.

முன்னதாக அங்கு பாஜ எம்பி தாகுர் சர்வேஷ் ஆய்வு செய்த போது, அரசு பொதுத் துறை நிறுவனமான அலிம்கோ வின் தயாரிப்புகள் தரமாக  இல்லை என குற்றம் சாட் டினார்.  இதை அசோக் மறுத் துள்ளார். இதுகுறித்து அசோக் கும் அருண் மிஸ்ராவும் காவல் நிலையத்தில் அளித்த  புகாரில், அங்கு ஏற்பட்ட வாக்குவாதத் தின் போது அசோக் மற்றும் அவரது உதவியாளர் அருண் மிஸ்ரா ஆகிய இருவரையும் எம்பி தாகுர்   சர்வேஷ் செருப் பால் அடித்து அவமதித்தார் என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருவதாக காவல் துறை அதிகாரி வினஸ் குமார் கூறினார்.அதிகாரி அசோக் செய்தியாளர்களிடம் கூறுகை யில், போதையில் இருந்த தாகுர் சர்வேஷ், தனது கட்சிக் காரர்களுடன் இணைந்து என் னையும், எனது  உதவியாள ரையும் தாக்கினார். அப்போது செருப்பால் எனது முகத்தில் அறைந்தார். இதுகுறித்து நான் பிரதமர் மோடியிடம் நேரில்  முறையிடுவதற்காக சந்திக்க அவகாசம் கேட்டு அவருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளேன் என்றார்.

ஆனால் இதை தாகுர் சர்வேஷ் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், நிகழ்ச்சியை நடத் துவதற்காக ரூ.10 லட்சம் கொடுக்கப்பட்டது. ஆனால்  ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்படாமல் இருந்ததை நான் சுட்டி காட்டினேன். அப் போது கட்சி காரர்களுக்கும் அவருக்கும் இடையில்  லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் யாரும் தாக்கப்படவில்லை என்றார்.தற்போது இந்த விவ காரம் உத்தரபிரதேச அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner