எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, மே 24 டில்லியில், இரு வார்டுகளுக்கு நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில், அந்த வார்டுகளை, ஆம் ஆத்மி மற்றும் காங்., கட்சிகள் கைப்பற்றி உள்ளன.

கடந்த, 14 மற்றும் 21 ஆம் தேதிகளில், மவுஜ்பூர் மற்றும் சராய் பிபல் தலா வார்டுகளுக்கான இடைத்தேர்தல் நடந்தது. அவற்றுக்கான முடிவுகள், நேற்று காலை அறிவிக்கப்பட்டன.அதில், மவுஜ்பூரில் போட்டியிட்ட, ஆம் ஆத்மியைச் சேர்ந்த, ரேஷ்மாவும், சராய் பிபல் தலா வார்டில் போட்டியிட்ட, காங்., வேட்பாளரும், வடக்கு டில்லி முனிசிபல் கார்ப்பரேசனின், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான முகேஷ் குமார் கோயலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இரண்டு வார்டுகளிலும் பா.ஜ.க. தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner